sleep-position Freepik | Model Image
ஹெல்த்

எவ்வளவு நேரம் என்பது மட்டுமல்ல... எந்த நிலையில் உறங்குகின்றீர்கள் என்பதும் முக்கியம்!

8 மணி நேர தூக்கம் ஆரோக்கியத்தைத் தரும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் எந்த நிலையில் படுக்கிறோம் என்பதும் ஆரோக்கியத்தோடு தொடர்புடையதே என்கின்றனர் மருத்துவர்கள்.

PT WEB

8 மணி நேர தூக்கம் ஆரோக்கியத்தைத் தரும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் எந்த நிலையில் படுக்கிறோம் என்பதும் ஆரோக்கியத்தோடு தொடர்புடையதே என்கின்றனர் மருத்துவர்கள்.

தலையை சற்று உயர்த்தியபடி, அதாவது தலையணை வைத்து படுக்கும்போது அது ஆசிட் ரெப்லக்ஸ் (ACID REFLUX) போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும் என்றும், தலையை தண்டுவடத்திற்கு நேர்க்கோட்டில் வைத்து படுக்கும்போது சீரற்ற ரத்த ஓட்டத்தால் சில அசவுகரியங்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..

sleep-position

அதே நேரத்தில் தண்டுவடத்தை பாதிக்காத வகையில், சரியான கோணத்தில் படுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.