ஹெல்த்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பிரச்னையா? - ஷேவிங் செய்வோர் கவனத்திற்கு...

Sinekadhara

தற்போது முகம், கால், கை என உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முடிகளுக்கு ஏற்றவாறு ஷேவிங் கிட்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. வாக்சிங் மற்றும் லேசர் சிகிச்சைகளைவிட பலரும் வலியின்றி முடியை அகற்ற ஷேவிங் முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் இது மலிவானதும் கூட. சரியான முறையில் ஷேவிங் செய்தால் ஸ்மூத்தான சருமத்தை பெறலாம். அதுவே சற்று தவறிவிட்டாலும் என்னவாகும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

ஷேவிங் செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:

  • எப்போதும் ஷேவிங் செய்வதற்கு முன்பு சருமத்தை சுத்தப்படுத்தி தயார்ப்படுத்த வேண்டும். இது நாம் விரும்பும் சருமத்தை பெற உதவுவதோடு, சருமம் சேதமடையாமல் பாதுகாக்கும். மேலும் சரும மேற்பரப்பிலுள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது.
  • சிறிய, குறைந்த நீளமுடைய முடிகளை ஷேவ் செய்வது எளிது. எனவே ஷேவிங் செய்வதற்கு முன்பு ட்ரிம்மரை வைத்து முடியின் நீளத்தை குறைத்து பிறகு ஷேவ் செய்தால் மென்மையான சருமத்தை பெறமுடியும்.
  • ஷேவிங் செய்து முடித்தவுடன் மாஸ்சரைசர் தடவவேண்டும். இது சருமத்தை ஹைட்ரேட் செய்வதுடன் சருமம் வறண்டுபோகாமல் இருக்கவும், தடிப்புகள், அரிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

செய்யக்கூடாதவை:

  • அழுக்கான மற்றும் கூர்மையல்லாத ரேசர்களை பயன்படுத்தக்கூடாது. இது தொற்றுகள் மற்றும் காயத்தை சருமத்தில் ஏற்படுத்தலாம்.
  • பிறர் பயன்படுத்திய பிளேடு மற்றும் ரேசர்களை பயன்படுத்தக்கூடாது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்கள் மற்றும் தொற்றுக்களை பரப்பும் எளிய வழி. இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • வறண்ட சருமத்தை ஷேவிங் செய்வதை தவிர்க்கவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஷேவிங் ஜெல் பயன்படுத்தாவிட்டால் சருமம் மேலும் வறண்டு, அரிப்பு ஏற்படும்.