Tired woman  Unsplash
ஹெல்த்

உடலுறவுக்கு பிறகு உடம்பு சரியில்லையா? காரணங்களும், சில எளிய தீர்வுகளும்

உடலுறவுக்குப்பின் உடல்நிலை சரியில்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டால் என்ன செய்வது? இதை நினைத்து பயப்படவேண்டாம்.

Snehatara

பொதுவாக உடலுறவு என்பது ஒருவருடைய உணர்ச்சிகளைப் பொருத்தது. ஒருவருக்கு ஹார்மோன் தூண்டப்பட்டு எப்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தனது இணையுடன் இணைந்து தங்களுக்குள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உடலுறவில் ஈடுபடுவர்.

உடலுறவு என்பது எண்டோர்பின், டோபமைன் மற்றும் ஆக்சிடோசின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களுடன் தொடர்புடையது. ஆனால் உடலுறவுக்குப்பின் உடல்நிலை சரியில்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டால் என்ன செய்வது? இதை நினைத்து பயப்படவேண்டாம்.

Sex

பொதுவாக கருத்தரிப்பு காலங்களில்தான் பெண்களுக்கு morning sickness என்று சொல்லக்கூடிய காலைநேரங்களில் உடல்நிலை சரியில்லாத உணர்வு இருக்கும். ஆனால் உடலுறவுக்குப்பின் ஆண், பெண் இருவருக்குமே உடல் சூடு மற்றும் வியர்வை தவிர்த்து உடல்நிலை சரியில்லாத உணர்வு ஏற்படுவதற்கு மருத்துரீதியாக சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை தெரிந்துகொண்டால் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சுலபம்.

1. உடல் வறட்சி

உடலில் போதிய நீரேற்றமின்மை பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. பொதுவாகவே உடலில் போதிய நீர் இல்லையென்றால் குமட்டல், தலைசுற்றல் போன்ற உணர்வுகள் ஏற்படும். உடலுறவின்போது மொத்த உடலும் இயக்கத்தில் இருப்பதால் சோர்வு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், நீரேற்றமின்மை இந்த நிலையை மேலும் மோசமாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2. கருப்பைவாயில் அழுத்தம்

உடலுறவுக்குப்பின்பு உடல்நிலை சரியில்லாதது போன்று உணர்ந்தால் அதற்கு மற்றொரு காரணம், கருப்பைவாயில் அழுத்தம் அல்லது தாக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம். நரம்புகள் நிறைந்த கருப்பைவாயில் ஆணுறுப்பால் அழுத்தம் ஏற்பட்டால் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத உணர்வு ஏற்படும். குறிப்பாக வேகஸ் நரம்பு தூண்டப்பட்டால், அது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால் உடம்பு சரியில்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Stomach ache, UTI

3. எண்டோமெட்ரியோசிஸ்

சிறுநீர்ப்பாதை தொற்று (UTI) அல்லது எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு உடலுறவுக்கு பிறகு வலி அல்லது உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்படும். கருப்பைக்குள் வளரக்கூடிய உணர்ச்சி திசுக்களின்மீது உடலுறவின்போது அழுத்தம் கொடுக்கப்பட்டால் அது குமட்டலை ஏற்படுத்தும். குறிப்பாக மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு இந்த உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும்.

4. பதற்றம்

மன அழுத்தம் அல்லது மன பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு உடலுறவுக்குப்பிறகு அசௌகரியமும் உடல்நிலை சரியில்லாத உணர்வும் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tired

5. நீண்ட உடலுறவு

நீண்டநேரம் உடலுறவு கொண்டால், அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத உணர்வு ஏற்படும். மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் உடலுறவின்போது உச்சத்தை அடைய போராடுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் உச்சக்கட்டத்தை அடைய நீண்ட நேரம் இழுத்துச் செல்லப்படலாம்.

6. உடல் இயக்க பிரச்னை (Motion sickness)

அதீத இயக்கம், குறிப்பாக உடலுறவின்போது தலையை அசைத்தல் தலைவலி மற்றும் உடல்நிலை சரியில்லாத உணர்வை கொடுக்கும். குறிப்பாக மோஷன் சிக்னெஸ் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

இதற்கு தீர்வுதான் என்ன?

உடலுறவுக்கு பிறகு உடநிலை சரியில்லாத உணர்வை சரிசெய்ய கீழ்க்கண்ட சில வழிகளை பின்பற்றலாம்.

Drinking water

1. உடலுறவின்போது பிறப்புறப்பு ஊடுருவலானது கடினமானதாக இல்லாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. சௌகர்யமாக நிலையில் இருத்தல் அவசியம். கட்டாய உணர்வு எழக்கூடாது.

3. உடலுறவில் தீவிரம் காட்டும்போது, மெதுவாகவும், சுலபமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. தினமும் அதிக தண்ணீர் அருந்துதல் அவசியம்.

மேற்கூறிய எதுவும் உதவவில்லை என்றால் மருத்துவரை அணுகி, உடல்நிலை சரியில்லாத உணர்வுக்கான காரணத்தை தெரிந்துகொண்டு அதனை சரிசெய்தல் நல்லது.