நச்சு பொருள்
நச்சு பொருள்  முகநூல்
ஹெல்த்

உயிரை கொல்லும் நச்சு பொருள் பஞ்சுமிட்டாயில் கலப்பா; உணவுத்துறை அதிகாரிகள் சொல்லும் வேதிப்பொருள் எது?

ஜெனிட்டா ரோஸ்லின்

பஞ்சுமிட்டாயில் உயிரை கொல்லும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்களை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்டதாக சென்னை , புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் வெகுவாக எழுந்தநிலையில், இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் சென்னை மெரினா, கடற்கரையிலும், புதுச்சேரி கடற்கரையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்?

பஞ்சுமிட்டாயில் , தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ரோடமின் பி (RHODAMINE - B) எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ரோடமின் பி எனப்படும் இந்த ரசாயன பொருட்கள் ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். இதை சாப்பிடுவதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிசந்திரன் தெரிவிக்கையில்,

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோரோனிம் பி என்பவை உணவில் பயன்படுத்த தடை செய்யப்பட்டவை. இவை புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனம்.ஆகவே இதனை சிறு குழந்தைகள் உண்ணும் போது எளிதாக அவர்களை பாதிக்க பெரும் அளவில் வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உணவில் கலக்கப்படும் ரசாயனம் குறித்து மருத்துவர் ராஜா தெரிவிக்கையில், "உணவில் கலக்கப்படும் ரசாயனத்தில் கார்சினோஜன் எனப்படும் நச்சு இருக்கும். இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே எந்த உணவாக இருந்தாலும் அதனை பாதுகாப்பான முறையில் உட்கொள்ள வேண்டும்.

வீட்டில் இயற்கையாக கிடைக்கும் உணவும், வீட்டில் தயாரிக்கப்படும் உணவும் மட்டுமே நல்லது. மேலும் ஆர்கானிக் உணவுகள் எந்தவித ரசாயணங்களையும் சேர்க்காமால் உற்பத்தி செய்யப்படுதனால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற பஞ்சுமிட்டாய்களில் ரசாயன கலப்படும் குறித்த செய்தி மக்களிடையே எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.