உடல் எடை குறைப்பு Facebook
ஹெல்த்

உடல் எடைக் குறைப்புக்கு 3 முக்கியப் படிகள்.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கடுமையான உடற்பயிற்சிகளோ, விலையுயர்ந்த டயட் முறைகளோ இல்லாமல் வீட்டிலேயே அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க எளிய வழிகள் பற்று மருத்துவர்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

PT WEB

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கத் துடிப்பவர்கள், மன உறுதியைவிட, சரியான பழக்கவழக்கங்களைக் கையாளுவதே முக்கியம் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் தெரிவித்துள்ளார். அவர் இதற்காக மூன்று முக்கியப் படிகளை விளக்குகிறார்.

முதலாவது, கலோரி கணக்கு. உங்கள் உடலின் அடிப்படைத் தேவையைக் காட்டிலும், நாளொன்றுக்கு 200 கலோரிகள் குறைவாக உண்ணத் தொடங்குங்கள்.

இரண்டாவது, புரதச்சத்து. உணவில் 30 முதல் 35 சதவீதம் புரதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது பசியைக் குறைப்பதோடு தசைகளை வலுவாக்கி, கொழுப்பை வேகமாக எரிக்கும்.

மூன்றாவது, சரிவிகித உணவு. உங்கள் உணவில் 40 சதவீதம் கார்போஹைட்ரேட் மற்றும் 30 சதவீதம் கொழுப்பு இருக்குமாறு சமநிலைப்படுத்துங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

உடல் பருமன்

தொடந்து, இரவு நேரங்களில் நொறுக்குத் தீனி உண்பதைத் தவிர்ப்பதும், வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது தசைப்பயிற்சி மேற்கொள்வதும் நிலையான உடல் மாற்றத்துக்கு உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய மாற்றங்களே சிறந்த பலனைத் தரும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.