Neuroplasticity web
ஹெல்த்

80 வயதிலும் கூர்மையாக இருக்கும் மனிதமூளை.. செல்களை புதுப்பிக்கும் நியூரோபிளாஸ்டிசிட்டி!

முதுமையில் மறதி என்பது இயல்பான ஒன்று என்றும் 80 வயதிலும் மனித மூளை கூர்மையாக இருக்கும் என்றும் நேச்சர் (Nature) இதழில் வெளியான ஆய்வில் உறுதி ஆகியுள்ளது.

PT WEB

முதியவர்களின் மூளையில் செல்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' நிகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது . மூளை ஹிப்போகாம்பஸ் நினைவு மையத்தில் உருவாகும் புதிய நியூரான்கள்
3.56 லட்சம் செல்களில் மேற்கொள்ளப்பட்ட நவீன ஆய்வில்
நிரூபணம் ஆகியுள்ளது.

நியூரோபிளாஸ்டிசிட்டி என்றால் என்ன? 

நியூரோபிளாஸ்டிசிட்டி என்பது புதிய அனுபவங்கள், கற்றல் மற்றும் காயங்களுக்கு ஏற்ப மூளையின் மாற்றம் மற்றும் அதற்கேற்ப நடக்கும் தகவமைப்புத் திறன் ஆகும். முறையான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். வயதானாலே ஞாபக மறதி ஏற்படும் என்பது பொதுவான கருத்து. ஆனால், 80 வயதுக்குப் பின்னரும் மனித மூளை புதிய செல்களை உருவாக்கி, தொடர்ந்து கூர்மையாக இருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

old lady - perpetual learning to improve the brain

முதுமையில் நண்பர்களின், உறவினர்களின் பெயர்களை மறப்பதும், சாவியைத் தேடுவதும் இயல்பானதாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் கற்றல், நினைவு திறன் ஆகியவற்றுக்கான மூளையின் நினைவு மையமான ஹிப்போகாம்பஸில் புதிய நியூரான்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கும் என்பதற்கான வலுவான ஆதாரங்களை 'நேச்சர்' ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.

சுமார் 3 லட்சத்து 56 ஆயிரம் செல்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நவீன ஆய்வில், ஆரோக்கியமான முதியவர்களின் மூளையில் செல்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' நிகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வயது மட்டுமே செல் புதுப்பிக்கும் செயல்பாட்டுக்கு காரணம் அல்ல என்பது தெரியவருகிறது.

old lady

ஆரோக்கியமான முதியவர்களின் மூளையிலும் நியூரான் கட்டமைப்பு உருவாவது சாத்தியம். இருப்பினும், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்தச் செயல்பாடு பாதிக்கப்படலாம் என எச்சரிக்கும் வல்லுநர்கள், முறையான வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் இலக்கு சார்ந்த தெரபி சிகிச்சைகள் மூலம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.