கல்லீரல் படம் கூகுள்
ஹெல்த்

கல்லீரல் கொழுப்பு நோயின் பெயர் மாற்றம்.. மருத்துவத்துறையின் புதிய அறிவிப்பு

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் பெயரை, ‘வளர்ச்சிதைமாற்ற செயலிழப்பு தொடர்புடையஸ்டீடோடிக் கல்லீரல் நோய்’ என்றுமாற்றியிருக்கிறது மருத்துவத்துறை.

Jayashree A

சிலர் ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதால் அவர்களது கல்லீரலானது பாதிப்படைந்து செயலிழக்கும் இவற்றை, Alcoholic Fatty Liver Disease என்றும்,ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு உடல் உபாதையால் கல்லீரல் பாதிப்படைந்து செயலிழக்கும் இவற்றை Non Alcoholic Fatty Liver Disease - NAFLD மருத்துவ வட்டாரத்தில் கூறி வந்தனர்.

கொழுப்பு கல்லீரல் பிரச்னையானது பொதுவாக மது அருந்துபவர்களுக்கே அதிகம் ஏற்படும் என்பதால், மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினையானது ‘நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ்’ (Non Alcoholic Fatty Liver Disease - NAFLD) என்று அழைக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த நோயின் பெயரை ‘மெட்டபாலிக் டிஸ்பங்ஷன் அசோசியேட்டட் ஸ்டீடோடிக் லிவர் டிசீஸ்’ (Metabolic Dysfunction Associated Steatotic Liver Disease - MASLD) அதாவது, ‘வளர்ச்சிதை மாற்ற செயலிழப்பு தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய்’ என்று மாற்றியிருக்கிறது மருத்துவத்துறை.

வளர்சிதை மாற்ற செயலிழப்பு அசோசியேட்டட் ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு குவிவதால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை, இது பெரும்பாலும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையது.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், வகை 2 நீரழிவு நோய் மற்றும் டிஸ்லிபிடெமியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு MASLD வரலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.