கல்லீரல் நோய் web
ஹெல்த்

கல்லீரல் பாதிப்பிற்கு இந்த 3 பழக்கங்களே காரணம்.. தவிர்க்க வழிகள் என்ன?

கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதற்கு உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

PT WEB

இந்தியாவில் 40 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், நமது மூன்று தவறான பழக்கங்களே அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் தாமதமாக உண்பது, இன்சுலின் சுரப்பை பாதித்து கல்லீரலில் கொழுப்பை சேர்க்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டாவது, காலையில் புரதச்சத்து இல்லாத அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது ரத்த சர்க்கரையை உயர்த்தி கல்லீரல் பாதிப்பிற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

கொழுப்பு கல்லீரல் நோய்

மூன்றாவதாக, சாப்பிட்டு முடித்ததும், உடனே அமர்வது அல்லது உறங்குவது கல்லீரலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர்க்க, இரவு உணவை விரைந்து சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும், காலையில் முட்டை அல்லது பயறு போன்ற புரத உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல, சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.