மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் டெல்லி பகுதியில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 17.4 சதவீத சிறுமிகளுக்கு நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களை அதிகம் பயன்படுத்துவது மன அழுத்தத்தை ஏற்படுத்தி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தூண்டி நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகளுக்கு கொண்டு சென்று விடுவதாக மருத்துவக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரவில் நெடுநேரம் வரை ஃபோன் பார்ப்பதால் தூக்கம் குறைந்து ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்தி உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சிறுமிகளிடம் கூட நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுவது கவலைக்குரிய விஷயம் என்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை குறைத்து உடல் உழைப்பை அதிகரிப்பதே இதற்கு தீர்வு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.