obesity  AI generated image
ஹெல்த்

4.10 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிப்பு.. ஐசிஎம்ஆர் பரிந்துரைகள் என்ன?

இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உடல் பருமன் காரணமாக அவதிப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாட்டை அச்சுறுத்தும் உடல் பருமனை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

PT WEB

2026ஆம் ஆண்டின் உலக உடல் பருமன் குறியீட்டு தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 4 கோடியே 10 லட்சம் குழந்தைகள் அதிக உடல் எடை கொண்டவர்களாக அல்லது உடல் பருமனாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. தற்போதைய நிலை தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மொத்த சிறுவர் உடல் பருமன் சுமையில் 11 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை இந்தியா கொண்டிருக்கும் என்பது ஒரு பெரும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

obesity

இந்நிலையில், ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் உணவுப் பொட்டலங்களின் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து குறித்த தெளிவான தகவல்கள் அச்சிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் 50 மீட்டர் சுற்றளவில் அதிக நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவுகளை விற்கவும், விளம்பரம் செய்யவும் தடை விதிப்பதை தீவிரமாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவும் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.