rainy days
rainy days pt web
ஹெல்த்

பெற்றோருக்கான வழிகாட்டி | மழைக்கால நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்?

PT WEB

பருவமழை நெருங்கிவிட்டது... தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை வெளுத்துவாங்குகிறது. இந்த நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் சேறும் சகதியுமான குட்டைகளில் விளையாடுவதையும் மழையில் நனைவதையும் சிறுவர்கள் விரும்புவர்.

மழை

இந்த பருவம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பல சவால்களையும் முன்வைக்கிறது (குறிப்பாக குழந்தைகளுக்கு). மழைக்காலத்தில் பிறரைகாட்டிலும் பள்ளிக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பருவமழை கடுமையாக இருக்கும் இந்தியாவில், நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 5 முதல் 6 வைரஸ் தொற்றுக்கள் மற்றும் 1-3 டெங்கு நேர்வுகள் பதிவாகின்றன.

மழைக்காலம் மகிழ்ச்சியான காலமாக இருந்தாலும் பல்வேறு நோய்களையும் உடன் கொண்டு வரும் காலம். அப்படியான சில நோய்கள் குறித்தும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.

(தகவல் உதவி: டாக்டர் முகேஷ் பத்ரா)

1. டெங்கு

dengue fever

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் மழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் மிகக் கடுமையான தொற்றுகளில் ஒன்றாகும். டெங்கு வைரஸை சுமந்து செல்லும் ஏடிஸ் (Aedes) கொசு மூலம் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும், இதன் விளைவாக அதிக காய்ச்சல், தோல் வெடிப்பு, தசை வலி மற்றும் தலைவலி ஏற்படுகிறது. Eupatorium Perfoleatum என்னும் ஒரு ஹோமியோபதி மருந்து, டெங்கு நோயாளிகளின் உடல் வலியைக் கணிசமாகக் குறைப்பதில் பிரபலமான மருந்துகளில் ஒன்றாக உள்ளது.

மலேரியா

malaria

இந்தியாவில் மலேரியா இன்றும் மிக முக்கியமான பிரச்னையாகவே உள்ளது. பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் இதனால் அதிளகவு பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42% குழந்தைகள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதனால் இறப்புகளும் பதிவாகியுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோமியோபதி டாக்டர் முகேஷ் பத்ரா

அதிக காய்ச்சல் சுழற்சிகள் (விட்டு விட்டு காய்ச்சல் வருவது) என்பது மலேரியாவின் பொதுவான அறிகுறியாகும். காய்ச்சல் ஒவ்வொரு 24 முதல் 48 மணி நேரத்திற்கும் ஒருமுறை மீண்டும் நிகழும். சின்கோனா (மரத்திலிருந்து பெரும் மருந்து) என்பது காய்ச்சல், தாகம், தூக்கம், படபடப்பு, பதட்டம், தசை மற்றும் மூட்டு அசௌகரியம் போன்ற அறிகுறிகளுடன் கூடிய மலேரியாவுக்கான ஒரு நன்கு அறியப்பட்ட ஹோமியோபதி தீர்வாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

டெங்கு மற்றும் மலேரியா போன்ற ‘கொசுக்களால் பரவும் நோய்’களுக்கு எதிராக நீங்கள் செய்யவேண்டியவை:

- கொசு விரட்டிகள், கொசுவலைகளைப் பயன்படுத்துதல்

- வீட்டில் உகந்த காற்றோட்டத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பது.!

இதன்மூலம் உங்கள் குழந்தையைப் கொசுக்களிடம் இருந்து நீங்கள் பாதுகாக்கலாம். இத்துடன்,

- உங்கள் சுற்றுப்புறங்களை தவறாமல் சரிபார்த்து, காலியான கொள்கலன்கள், பூந்தொட்டிகள், சாக்கடைகள் மற்றும் குட்டைகள் போன்ற பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை அகற்றி மீண்டும் நீர் தேங்காதவாறு பார்த்துகொள்ளவேண்டும்.

- குழந்தைகளுக்கு சீரான உணவை வழங்க வேண்டும். அதிகம் ஓய்வெடுக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் அவர்களை ஊக்குவிக்கவும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களையும் சிற்றுண்டிகளையும் கொடுக்க வேண்டும்.

- வெளியில் செல்ல வேண்டிய நேரங்களில் அங்கு கை கழுவும் இடங்கள் இல்லாத சமயங்களில் குழந்தைகளின் பையில் ஒரு சிறிய கை சானிடைசரை பேக் செய்யவும்.

- சரியான மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கும் உங்களது குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் தேவையான சூழலை பராமரிக்கலாம்.

பாதுகாப்பான மழைக்காலத்தை வரவேற்போம்!