மன அழுத்தம்  முகநூல்
ஹெல்த்

எல்லாமே அந்த 50 நொடிகளில் தான்..குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள்! மனஅழுத்த பிரச்னை - ஓர் பார்வை

மனஅழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் விளைவுகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவர் ரவிசங்கர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தனி ஒருவரின் மனநலம் என்பது ஒரு சமுதாயத்தின் பொது நலனாக இருக்கிறது. மன அழுத்தம் போன்ற எண்ணங்கள் ஒருவரின் மனநலனை பாதிக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளும் ஏராளம். எனவே எப்பொழுது இத்தகைய எண்ணம் தோன்றுகிறது, இதிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பது குறித்தெல்லாம் கூறுகிறார் மனநல மருத்துவர் ரவி சங்கர்.

மனநல மருத்துவர் ரவி சங்கர்

50 வினாடிகள் போதும்:

தற்போது உள்ள சூழலில் தற்கொலையினால் தொடரும் மரணங்கள் என்பது அதிகரித்து கொண்டு வருகிறது. இத்தகைய எண்ணங்கள் ஏற்பட வெறும் 50 வினாடிகள் போதுமானது. இந்த வினாடியில் அவர்களையே அறியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இறந்து விடுவோம் என்ற மரணம் குறித்த பய உணர்வு 50 வினாடிகளுக்கு முன்புதான் ஏற்படுகிறதே தவிர இந்த 50 வினாடிகளை தாண்டி விட்டார்கள் என்றால் அத்தகைய எண்ணங்கள் தோன்றாமல் அது தற்கொலையாக மாறிவிடுகின்றது.

எவ்வளவு தான் ஒருவர் தற்கொலை குறித்த எண்ணம் உடையவராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அத்தகைய எண்ணத்தை மறந்து தாங்கள் விரும்பியதை நோக்கி மனம் நகர்கிறது. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் விளையாடுவது, சமைப்பது.

இதனை தண்டியும் தற்கொலை எண்ணங்கள் தோற்றும் சமயம் என்பது அமைதியான, தனிமையான சூழலில், யாரும் அவர்களுடன் இல்லாத சூழலலில் குறிப்பாக இரவு நேரங்களில் இத்தகைய எண்ணங்கள் அதிகரிக்கிறது.

8 வயதில்தான் ஆரம்பிக்கிறது:

தன்னை சுற்றி உள்ள ஒவ்வொன்றயும் 8 வயதிலிருந்தே ஒரு குழந்தையானது கவனிக்க ஆரம்பிக்கின்றது. இப்பொழுதுதான் அசட்டுதனமான ஒரு தைரியம் வருகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இந்த வயதில் தான் மூளையின் செயல்பாடுகள், ஹார்மோன்களின் மாற்றம் போன்றவற்றின் காரணமாக ஒரு மனிதனின் “உணரடக்கூடிய திறன்” என்பது அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம் பிரச்னைகளை கடந்து போவதும் எளிதாகவே இருக்கும் .

இந்த சமயத்தில் ஏற்படும் சிறிய ஏற்கதகாத சந்தர்ப்பங்கள் கூட இவ்வயதினரை மனஅழுத்தத்திற்கு இட்டு செல்லும் .

8-12 வயதை தாண்டி 13 வயதை அடையும் போது அதன் தொடக்கத்தை “டீனேஞ்” என்கின்றனர். இப்பருவம் உற்சாகத்தை கொடுக்க கூடியதாக அமைகிறது. இந்த வயதில் தான் தனக்கு கிடைக்காத ஒன்றை பற்றி சிந்திக்கவும் ஆரம்பிக்கின்றனர்.

வயது

பள்ளிக்கூடம் போன்று வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் போது வெவ்வேறு மனநிலைகளை கொண்ட பல தரப்பினர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையான எண்ணங்களின் ஆதங்கங்களும் ஒன்று சேரும்போது குழந்தைகளின் எண்ணத்தில் ஒரு மாற்றம் என்பது ஏற்படுகின்றது.

இவ்வயதில் தனிமையை பெரும்பாலும் நாட ஆரம்பிக்கின்றனர். 8-12 வயது வரை இந்த தனிமை என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. 13 -19 வயது வரை தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க நினைக்கின்றனர்.

உளவியலை பொறுத்தவரை இந்த பருவக்காலங்களில் தான் நிறைய உளவியல் சார்ந்த குழப்பங்கள் என்பது அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக இளம்பருவத்தினர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டும் போது அதனை திருத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் என்பது ஏற்படுகின்றது. ஆனால் இப்பொழுது அதை சொல்வதற்கான சந்தர்ப்பங்களும் இல்லை.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம்:

  • கல்வியை தாண்டி பெற்றோரின் அறிவிரை, பராமரிப்பு, குழந்தைகளின் நடத்தையின் மீதான அவர்களின் கண்காணிப்பு ஆகியவை இல்லாமல் போவது.

  • குழந்தைகளை மற்ற குழந்தைகளுடம் சேர்த்து ஒப்பிட்டு பேசுவது

  • குழந்தைகளுடன் பேசுவதற்கு நேரத்தை செலவிடாமல் இருப்பது

மன அழுத்ததிற்கான காரணம்

* பெற்றோரின் அன்பும் , அரவணைப்பும் இல்லாமல் போவது

  • மன அழுத்தம் மாதிரியான எண்ணங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ’வருங்காலத்தில் என்ன ஆக போகிறதோ?’ என்ற எண்ணம்.

  • தன் குழந்தையின் இயலாமையை அடுத்தவரிடத்தில் கூறும் போது அதனை அறியும் குழந்தைக்கு இதுவே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இது இறுதியில் மன அழுத்தத்திற்கு இட்டு செல்கிறது

எப்படி  ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் 

அளவிற்கு மீறிய தேவைகளும் ஆசைகளும் ஏற்படும் போது தங்களது பொருளாதார நிலைமையையும் எல்லாவற்றையும் பெற்றோர்கள் தான் தங்களின் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

இப்பருவத்தில் குழந்தைகளிடம் பேசுவதையே பெற்றோர்கள் வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். அவர்களின் தேவையையும் ஆசையையும் நன்கு அறிந்து அதில் உள்ள நன்மையையும் எடுத்து கூற வேண்டும்.

மனாழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க

எது நடந்தாலும் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பான்மையும் அதேசமயம் வாழ்க்கையின் தடத்திலேயே போவதும் தான் நல்லது அதனை தாண்டியும் போக முடியாது, அதனை மீறியும் போக முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையையும் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

குழந்தையின் தேடல் என்ன என்பதை அறிந்து அதனை கொடுக்க வேண்டும். அதை கொடுக்கா விட்டலும் அதற்கு தகுந்தார் போல நெருங்கிய ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

  • உளவியலாளர்களை பொறுத்த வரை மன அழுத்தம் ஏற்பட்டவரிடம் பேசும் போது ஒரு கீவேர்டு என்பது இருக்கும் அதனை கொண்டும் மன அழுத்தம் ஏற்பட்டவரின் சோகத்திற்கான காரணம் என்ன எனபதை அறிந்து கொள்ள முடியும். இதையே பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளிடம் பின்பற்ற வேண்டும்.

  • நன்னெறி கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தனி மனித ஒழுக்கங்கள் என்பது என்ன என்பது குறித்தெல்லாம் கல்வி சாலைகளிலே கற்று கொடுக்க வேண்டும்

  • எதனால் குழந்தையின் முகம் வாடியுள்ளது என்பதற்கான காரணத்தை அறிய வேண்டும்.

  • ஒவ்வொரு பள்ளி கூடங்களும் சமூக ஆய்வாளர்களையும் அல்லது மனநல மருத்துவரையும் தங்களது பள்ளிகளில் நியமிக்க வேண்டும். பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் சொல்ல முடியாத பிரச்னைகளை இவர்களிடம் கூறும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் அமையும்.இவர்கள் தனிப்பட்ட முறையில் அக்குழந்தையின் மனநிலையை அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.

  • குழந்தை குழந்தையாக இருக்க வேண்டும் அது அதற்குரிய வயதில்தான் அது அது நடக்க வேண்டும்.

  • தொழிநுட்ப வளர்ச்சியும் மற்ற காரியங்களும் எக்காரணத்திலும் ஒரு தனி மனித சுழற்சியை பாதிப்பதாக இருக்க கூடாது.