Junk Food  PT web
ஹெல்த்

கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அதிரவைக்கும் ஆய்வு

கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?... எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

PT WEB

கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?... எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Junk food

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக (Arizona State University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கின்றன. இந்த ஆய்வில், முதல் ஆறு மாதங்கள் அதிக கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்ட எலிகளுக்கு குடல் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கையும், அவை வேகமாகப் பெருகும் தன்மையும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

7ஆவது மாதத்தில் இருந்து குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளை எலிகளுக்கு வழங்கினாலும், குடலில் ஏற்பட்ட மாற்றங்களில் சுமார் 18 சதவீதம் அளவு, அடுத்த 4 வாரங்கள் வரை நீடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடலின் உட்புறச் சுவரைப் பாதுகாத்து, சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்கும் இந்த ஸ்டெம் செல்கள், மிக வேகமாகப் பெருகும்போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனினும், இந்த மாற்றம் மனிதனின் உடலில் ஏற்படுமா? என்பது இதுவரை நிரூபணமாகவில்லை. இருப்பினும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு தற்போதே மாறுவது, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் என்பதே இந்த ஆய்வு உணர்த்தும் செய்தி!