Frequent Snacking May Lead to Insulin Resistance Reuters
ஹெல்த்

நொறுக்குத் தீனி அடிக்கடி சாப்பிடுவீர்களா? காலப்போக்கில் உருவாகும் அபாயம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை

பொழுதுபோக்கிற்காக அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடுவது, காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்புத் திறனை உருவாக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை பார்க்கலாம்.

PT WEB

பொழுதுபோக்கிற்காக அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடுவது, காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்புத் திறனை உருவாக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை பார்க்கலாம்.

frequent snacking insulin resistance health risks

பொதுவாக, அடிக்கடி சாப்பிடுவதாலேயே உடல்நலம் கெட்டுவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், சலிப்பினால் சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகள் சேர்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடிக்கடி உயர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த கணையம் தொடர்ந்து இன்சுலினைச் சுரக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாக கூறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு இந்த நிலை நீடித்தால், உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்புத் திறன் உருவாகக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேநேரம், திட்டமிட்டுச் சாப்பிடும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளுக்கும், சலிப்பினால் சாப்பிடுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாகவும், நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வது ரத்த சர்க்கரையைச் சீராக வைத்திருக்க உதவும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, சாப்பிடுவதற்கு முன் நமக்கு உண்மையிலேயே பசிக்கிறதா அல்லது சலிப்பினால் சாப்பிடுகிறோமா என்பதைக் கவனிப்பதும், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.