கோடை வெளியில்
கோடை வெளியில் முகநூல்
ஹெல்த்

வீசும் வெப்ப அலை.. கோடை வெயிலில் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும்! - மருத்துவர் சொல்வதென்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

கோடை காலம் என்றாலே, தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குழந்தைகள் குஷி மூடுக்கு மாறிவிடுவார்கள். நண்பர்களுடன் விளையாடலாம், அம்மா அப்பாவோடு நேரம் செலவிடலாம், உறவினர்களின் வீட்டுற்கு செல்லாம் என விடுமுறையை எப்படியெல்லாம் செலவிடலாம் என்று லிஸ்ட் ரெடியாக இருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்.

கோடைக்காலத்தில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் கண்காணிக்க வேண்டும் என்பதிலேயே பெற்றோர்களின் கவனம் இருக்கும். கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும்.

இச்சமயங்களில், அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது, நாவறட்சி ஏற்படும், சிறுநீர் வெளியேறும் அளவு குறையும் என கோடை கால பிரச்னைகள் ஏராளம். இந்நிலையில், ஐ.நாவின் குழந்தைகள் நல ஆணையம் சமீபத்தில் கொடுத்திருக்கும் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ”இந்தியா உட்பட கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இந்த வெப்ப அலை காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும். கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, குழந்தைகள் வெயிலில் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்க வேண்டும்.” என்பதுதான் அது.

இந்நிலையில், கோடை வெயிலில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் என்ன என்பது குறித்த விளக்கத்தினை அளிக்கிறார் பொது நல மருத்துவர் ரேவதி மணிபாலன். இதன் விவரங்களை கீழே காண்போம்.

சம்மர் தொடங்கியாச்சு. சுட்டெரிக்கும் வெயில் பெரியவர்களையே அடித்து சாய்த்துவிடும் என்றிருக்க இதில், குழந்தைகள் மட்டும் எப்படி வெயில் தாங்குவார்கள் ?...

வெப்பத்தால் வரக்கூடிய நோய்கள் என்னென்ன ?

வெயிலால் வரும் ஆபத்தின் 4 நிலைகள் :(Heat related illnesses)

  • தசைப்பிடிப்பு (Heat cramps)

  • சோர்வு (Heat Exhaustion)

  • மயக்கம் (Heat Syncope )

  • ஸ்ட்ரோக் (Heat stroke)

குழந்தைகளிடம் தோன்றும் Heat exhaustion அறிகுறிகள்

*அதிக தாகம்

*சோர்வு

*மயக்கம்

*தசைபிடிப்பு

*வாந்தி

*எரிச்சலுறுதல்

*வாந்தி

*தலைவலி

*அதிக வியர்வை

வெப்ப தாக்கம்:

*கடுமையான தலைவலி

*பலவீனம்

*தலைச்சுற்றல்

*குழப்பம்

*விரைவான சுவாசம் மற்றும்

*அதிவேக இதய துடிப்பு

*சுயநினைவு இழப்பு

*வலிப்பு தாக்கங்கள்

*வியர்த்து கொட்டுதல்

*சிவந்த, சூடான, வறண்ட தோல்

*உடல் வெப்பநிலை 105°F (40.5°C) அல்லது அதற்கு மேல் உயரும்.

இவையெல்லாம் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட கூடிய பிரச்னைகளாக மருத்துவர் தெரிவிக்கிறார்.