அதிக வெப்பம் முகநூல்
ஹெல்த்

முதுமையைத் தூண்டும் வெப்பம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வெப்பமான பகுதிகளில் வாழும் மக்கள், குளிர்ந்த இடங்களில் வாழும் மக்களைவிட அதிக மாற்றங்களை சந்திப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

PT WEB

அதிக வெப்பம், வயதானவர்களை மேலும் வேகமாக முதியவர்களாக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வெப்பமான பகுதிகளில் வாழும் மக்கள், குளிர்ந்த இடங்களில் வாழும் மக்களைவிட அதிக மாற்றங்களை சந்திப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அதன்படி, அதிக வெப்பம் உடலின் D.N.A செயல்பாடுகளைப் பாதித்து வயதாகும் செயல்முறையைத் தூண்டுவதாக சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் மூன்றாயிரத்து 600க்கும் மேற்பட்டோரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 90 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பத்தில் வசிப்பவர்களின் உடல் மூலக்கூறுகள் மற்றவர்களைக் காட்டிலும் முதுமையை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப உயர்வு ஆகியவை மக்களின் டி. என்.ஏ.வை வேதியியல் ரீதியாக மாற்றியமைக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.