பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் வாங்கப்படும் உணவுகளை உண்பதால், இதயத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் இதயத்தை நேரடியாக சென்று தாக்கி, இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 3 ஆயிரம் பேருக்கு, பிளாஸ்டிக் கண்டெய்னர் உணவுகள் வழங்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ள நிலையில், அவற்றில் சூடான உணவுப் பொருட்கள் வைக்கப்படுவதால், அதிலுள்ள ரசாயனங்கள், உணவில் எளிதில் கலந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.