இருதயநோய் நிபுணர் டாக்டர் பிமல் சாஜர், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய பழக்கவழக்கங்களை பரிந்துரைக்கிறார். முழு உணவுகளைத் தேர்ந்தெடுத்து, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்து, உப்பை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும். மன அழுத்தத்தை தியானம், யோகா மூலம் குறைத்து, சுறுசுறுப்பாக இருப்பது இதயத்தை வலுவாக வைத்திருக்கும்.
உங்கள் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தினமும் சில எளிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது நல்லது என்று இருதயநோய் நிபுணர் கூறுகிறார்..
நாம் சாப்பிடும் உணவில் கொஞ்சம் கவனமும் விழிப்புணர்வுடனும் சாப்பிட்டால் பெரிய வித்தியாசத்தை உணர முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. ஆம் கவனத்துடன் சாப்பிடுவது என்பது அவசரமாக சாப்பிடுவதற்குப் பதிலாக அல்லது டிவி மற்றும் தொலைபேசிகளால் திசைதிருப்பப்படுவதற்குப் பதிலாக நீங்கள் என்ன?, எவ்வளவு? சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதாகும். .
புதிய, முழு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களை தவிர்ப்பது உங்களின் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் உடலின் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் உடலின் சமிக்ஞைகளைக் கேட்டு, வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்தும்போது, நீங்கள் இயல்பாகவே அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும் என்று இருதயநோய் நிபுணரான டாக்டர் பிமல் சாஜர், தனது வலைப்பதிவான SAAOL இதழில், தினமும் கடைப்பிடிக்கும் எளிய பழக்கவழக்கங்கள் இதய நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என்று விளக்குகிறார். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க...
எல்லா கொழுப்புகளும் தீங்கு விளைவிப்பதில்லை. ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் மற்றும் வெண்ணெய் பழங்களிலிருந்து வரும் ஆரோக்கியமான கொழுப்புகள் வீக்கத்தைக் குறைத்து கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதே நேரத்தில், வறுத்த உணவுகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் மற்றும் காலப்போக்கில் தமனிகளை சேதப்படுத்தும் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதை குறைப்பது முக்கியம்.
உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மீன், கோழி போன்ற மெலிந்த புரதங்களை சேர்த்துக் கொள்வது உங்கள் இதயத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துவது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் உங்கள் உணவில் படிப்படியாக, சில மாற்றங்களைச் செய்வது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பதை எளிதாக்குகிறது.
அதிக உப்பை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.. புதிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைப்பது மற்றும் உணவு லேபிள்களைச் சரிபார்ப்பது சமையல் செய்வது ஆகியவை சோடியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிகள் ஆகும். அதனால் உங்களின் உணவில் உப்பை சிறிதளவு குறைத்தால் அது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தின் அழுத்தத்தையும் குறைக்கிறது..
ஆரோக்கியமான உணவு கூட அதிக அளவில் சாப்பிட்டால் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் சாப்பிடும் போது சிறிய தட்டுகளைப் பயன்படுத்துவது, மெதுவாக சாப்பிடுவது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைத் தடுக்கலாம். இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இதனால் இதயம் பாதுகாக்கப்படும்..
இதயம் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு இரவும் 7–9 மணிநேரம் நல்ல தரமான தூக்கத்தை தூங்க வேண்டும்.. குறைவான தூக்கம் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரேற்றமாக இருப்பது இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய உதவுகிறது மற்றும் உடல் சோர்வையும் குறைக்கிறது.
நாள்பட்ட மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தியானம், யோகா அல்லது ஒரு நாளைக்கு 10–15 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாச பயிற்சி ஆகிவற்றை செய்வது நல்லது.. அப்படி செய்வது உங்களின் மனதும் சரி உடலிலும் சரி மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தும்..
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் அல்லது லேசான நீச்சல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதயத்தை பலப்படுத்துகின்றன. இதில் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்றவை செய்து வருதல் நல்லது..
புகைபிடித்தல் இதய தமனிகளை சேதப்படுத்துகிறது. அதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் குறைக்கிறது, மேலும் இதய நோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் இதுவும் ஒன்றாகும். அதனால் புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதே போலவே அதிகப்படியான குடிப்பழக்கமும் உள்ளவர்கள அதனை குறைத்துக் கொள்வது நல்லது.. காரணம் அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய தசையை பலவீனப்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது இதய அபாயங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. தடுப்பு பரிசோதனைகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய தெளிவான படத்தை உங்களுக்கு வழங்குகின்றன மற்றும் தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நீங்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளா முடியும்.. அதனால் வருடத்திறகு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனைகளை செய்வது நல்லது..