மூச்சு அடக்குதல் Breathlessness
ஹெல்த்

’அதிக நேரம் மூச்சை அடக்குவது ஆபத்து..’ மருத்துவர்கள் எச்சரிக்கை!

நமது மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடியும்? என பலரும் சோதனை செய்து பார்ப்பது உண்டு. இது சாதாரண சவால் போல தோன்றினாலும், அதிக நேரம் மூச்சை அடக்குவது ஆபத்தைத் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

PT WEB

மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடிகிறது என்பதைக் கொண்டு நுரையீரல் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியாது; உடற்பயிற்சி நிலை, மூச்சைக் கட்டுப்படுத்தும் பழக்கம், கார்பன் டை ஆக்ஸைடு தாங்கும் திறன் போன்றவை இதை தீர்மானிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் மூச்சை அடக்குவது ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்தி பலவீனம், குழப்பம், மயக்கம் போன்ற ஆபத்துகளை தரும் என்பதால், நுரையீரல் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ பரிசோதனையே பாதுகாப்பான வழி என வலியுறுத்தப்படுகிறது.

ஒரு நிமிடம் .... இரண்டு நிமிடம் ...அதற்குமேல் மூச்சை அடக்க முடிந்தால்,நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாகநினைப்பது தவறு.. மாறாக நமதுஉடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் வேறுமாதிரியானவை....

பொதுவாக நாம் மூச்சை இழுத்துஅடக்கிய நொடியே, உடலுக்குள்இருக்கும் ஆக்சிஜனை, செல்கள்பயன்படுத்த தொடங்குகின்றன.. அதேநேரத்தில் சுவாசத்தின் மூலம் வெளியேறவேண்டிய கார்பன் டை ஆக்ஸைடு,ரத்தத்தில் படிப்படியாக அதிகரிக்கிறது...தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க,உடனே மூச்சு விட வேண்டும் என்றஅழுத்தம் உண்டாகிறது. சிறிதுநேரத்திலேயே நெஞ்சில் அழுத்தம்ஏற்படுவது போன்றும், சிலதன்னிச்சையான அசைவுகளும்ஏற்படலாம்....

மூச்சு அடக்குதல்

ஆனால் தொடர்ச்சியாக நீண்ட நேரம்மூச்சை அடக்கும்போது , ரத்தத்தில்உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து,தலைசுற்றல், பலவீனம், குழப்பம்போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்என்றும், மிக அதிகமாக ஆக்சிஜன் குறைந்தால், மயக்கம்,சுயநினைவின்மை ஏற்படும் என்றும்மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்..குறிப்பாக இதய மற்றும் நுரையீரல்பிரச்சனை உள்ளவர்கள்,மருத்துவர்களின் ஆலோசனையின்றி,மூச்சை அடக்கும் பயிற்சியினைமேற்கொள்ளக்கூடாது என்றும்அறிவுறுத்துகின்றனர்...

அதேநேரம் எவ்வளவு நேரம் மூச்சைஅடக்க முடியும் என்பதை கொண்டுநுரையீரல்களின் ஆரோக்கியத்தைகணக்கிட முடியாது என்றும்,ஒருவருடைய உடற்பயிற்சி, மூச்சைகட்டுப்படுத்தும் பழக்கம், கார்பன் டைஆக்ஸைடு அளவை தாங்கும் திறன்போன்ற காரணிகள், மூச்சை அடக்கும்நேரத்தை மாற்றும் என்றும் மருத்துநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்....

மேலும்நுரையீரல் ஆரோக்கியத்தில் சந்தேகம்இருப்பின், முறையான மருத்துவபரிசோதனை செய்து கொள்வதே சிறந்தபாதுகாப்பு என்கின்றனர் மருத்துவர்கள்