HPV virus x page
ஹெல்த்

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்.. HPV வைரஸே காரணம்!

HPV வைரஸ் தொற்று மூலம் புற்றுநோய் ஏற்படும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

PT WEB

HPV வைரஸ் தொற்று மூலம் புற்றுநோய் ஏற்படும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே பெரும்பாலும் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 20 முதல் 30 வயது வரை உள்ள இளம் வயதினருக்கு கருப்பை, வாய், தொண்டை, மலக்குடல் புற்றுநோய் அதிகமாக இருப்பதாகவும் இதற்கு HPV என்ற வைரஸ் தொற்றே பாதை அமைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். HPV என சுருக்கமாக அழைக்கப்படும் Human Papillomavirusகள் பாலுறவு மூலம்தான் அதிகம் பரவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

HPV virus

மேலும் HPV வைரஸ் தூண்டுதலால் வரும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகை புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய மாவட்டந்தோறும் பாப் ஸ்மியர் சோதனை, HPV DNA சோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான வசதிகள் இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. HPV வைரசை தடுப்பூசி மூலம் தடுத்துக்கொள்ள முடியும். எனினும் அரசு திட்டங்கள் மூலம் இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்பதும் தனியார் மருத்துவமனைகள் மூலமே செலுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.