வயிற்றில் இருந்த பொருட்கள்
வயிற்றில் இருந்த பொருட்கள் PT
ஹெல்த்

இளைஞரின் வயிற்றில் கிடந்த ஹேர்பின், சேஃப்டி பின், பிளேடுகள்! அதிர்ந்த மருத்துவக்குழு!

Jayashree A

புதுச்சேரியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அதீத வயிற்றுவலி மற்றும் ரத்தவாந்தி போன்ற உடல் உபாதைக்காக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ம் தேதி பெற்றோர்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மருத்துவர்கள் குழு

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவரின் வயிற்றில் 13 ஹேர்பின், 5 சேஃப்டி பின், 5 பிளேடுகளை எடுத்துள்ளனர். அத்தனையும் குத்தி கிழிக்கின்ற கூர்மையானப் பொருட்கள். மென்மையான குடலினில் இத்தகைய பொருட்கள் இருந்ததை கண்ட மருத்துவர்கள் குழு, பயந்துதான் போயுள்ளது!

முதலில் உடனடியாக ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று மருத்துவக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு இளைஞரின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவக்குழு இரப்பை குடல் (gastronenterologist) மருத்துவர் K.சசிகுமாரின் ஆலோசனைப்படி அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக எண்டோஸ்கோபி மூலம் துகள்களை அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி ஆகஸ்ட்8 ம் தேதி மருத்துவகுழு இணைந்து சவாலான இரண்டு மணிநேர எண்டோஸ்கோபி சிகிச்சையில், இளைஞரின் வயிற்று பகுதியில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்தனர். பிறகு இளைஞரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததும், அவர் 9ம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.