heart attack  web
ஹெல்த்

அதிகரிக்கும் டயட் தொடர்பான இதயநோய் மரணங்கள்.. காரணம் என்ன?

அதிக உப்பு, குறைந்த பழம், முழுத் தானியங்களின் பற்றாக்குறை ஆகியவை இதயநோய் மரணங்களை ஆபத்தான அளவில் உயர்த்தியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

PT WEB

204 நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் 'தி இன்னொவேஷன் நியூட்ரிஷன்' என்ற ஆய்விதழில் வெளியானது. இதன்படி 2023இல் மட்டும் டயட் தொடர்பான காரணத்தால் இதய நோயால் உலகெங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சம் ஆகும். சீனாவில் 13.6 லட்சம் பேரும் இந்தியாவில் 11 லட்சம் பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

food for heart

இந்த வகை மரணங்களுக்கு மூன்று முக்கியக் காரணங்களை இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. அதிக அளவு உப்பை உட்கொள்வது, குறைந்த அளவில் பழங்களை உட்கொள்வது, முழுத் தானியங்களைக் குறைவாக உட்கொள்வது ஆகியவைதான் அந்தக் காரணங்கள்.

ஆகவே, இதய நோய் தொடர்பான மரணங்களைத் தவிர்க்க பழங்கள் அதிகமாக உட்கொள்வது, உப்பைக் குறைவாக எடுத்துக்கொள்வது, விதைகளை அதிக அளவில் உட்கொள்வது, முழுத் தானியங்களை அதிகமாக உட்கொள்வது, பருப்புகளை அதிகமாக உட்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைவாக உட்கொள்வது உள்ளிட்ட உணவு முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.