சாதாரண நீர் குளியல் vs வெந்நீர் குளியல் முகநூல்
ஹெல்த்

இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா..! சாதாரண நீர் குளியல் vs வெந்நீர் குளியல்! எது பெஸ்ட்?

வெந்நீர் குளியல் vs குளிர்ந்த நீர் குளியல் இரண்டில் எது குளிப்பதற்கு சிறந்தது என்று நம்மில் பலருக்கு கேள்வி உண்டு. எது சிறந்தது பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வெந்நீர் குளியல் vs குளிர்ந்த நீர் குளியல் இரண்டில் எது குளிப்பதற்கு சிறந்தது என்று நம்மில் பலருக்கு கேள்வி உண்டு.. பருவத்திற்கு ஏற்ப அதைத் தேர்ந்தெடுக்கும் சிலர் நம்மில் உள்ளனர்.. ஆனால் சிலரோ எந்த காலம் வந்தாலும்,குளிர்ந்த நீர் அல்லது வெந்நீரிலேயே மட்டும் குளிக்கும் பழக்கம் இருக்கும்..

இந்த இரண்டில் எது சரி என்று கேட்டால் இரண்டுமே சரிதான் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கும் அவரவர் உடல்நிலைக்கும் ஏற்ப குளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே, எந்தக் குளியலில் என்னென்ன பலன்கள் உள்ளன என்று பார்ப்போம்...

குளிர்ந்த நீர்(அ) சாதாரண நீர் குளியல்!

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

  • சோம்பலை நீக்கி, நரம்புகளைத் தூண்டி, காலையில் புத்துணர்ச்சியுடன் நாளை துவங்க உதவி புரிகிறது.

  • நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

  • குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.

  • மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது

  • செல்லுலார் மட்டத்தில் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • குறிப்பாக ஆராய்ச்சிகளின்படி, மீளுருவாக்கம் செய்யும் பண்புகளை (regenerative properties) கொண்டுள்ளது.

  • பரபரப்பான வேலை நாள் அல்லது கடின பயிற்சிகளுக்கு பிறகு இது தசைகளை ரிலாக்ஸ் செய்ய மற்றும் தசை ரீஜெனரேஷனை அதிகரிக்கவும் குளிர்ந்த நீர் உதவுகிறது.

  • குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது

  • தலைமுடியை வலுப்படுத்த முனைந்து, இதன் விளைவாக முடியின் ஒட்டு மொத்த தரமும் மேம்படுகிறது.

  • மழை, குளிர் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கப்பது நல்லது.

வெந்நீரில் குளியல்!

  • மாலையில் வெந்நீரில் குளிப்பதால் பதற்றம் குறையும். இதனால், இரவு நல்ல உறக்கம் வரும்.

  • பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல சூடான நீர் உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

  • குளிர்காலத்தில், வெதுவெதுப்பான நீர் உங்கள் தொண்டை, மூக்கு மற்றும் காற்றுப்பாதைகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

  • தசைகளைத் தூண்டுவதன் மூலமும், நமது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலமும் உடலை நிதானப்படுத்த உதவுகிறது.

  • வெந்நீர் குளியல்உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது. இருப்பினும், இது சருமத்தை மிகவும் வறண்டதாக மாற்றும். இதனை தவிர்க்க குளித்த பிறகு மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

  • அடிக்கடி வெந்நீரில் குளிப்பது சரும வறட்சி , எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது,

  • இது இறுதியில் சருமத்தின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை மோசமடைய செய்கிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் வெந்நீர் குளியல் நல்லது.