HMPV வைரஸ் முகநூல்
ஹெல்த்

அதிகரிக்கும் HMPV வைரஸ் பரவல்? மறுப்பு தெரிவித்த சீனா அரசு!

கொரோனா போன்று மற்றொரு புதிய வைரஸ் பரவுவதாக வெளியாகும் செய்திக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

PT WEB

கொரோனா போன்று மற்றொரு புதிய வைரஸ் பரவுவதாக வெளியாகும் செய்திக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹெச்.எம்.பி.வி. எனப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள்,14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் வேகமாக பரவி வரும் இந்த வகை வைரசால், சுவாசப் பிரச்னை அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுத்தமாக இருப்பது, பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய வைரஸ் பரவுவதாக வெளியான செய்திக்கு சீனா முதல் முறையாக மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமின்றி வரலாம் எனவும் சீனா அரசு கூறியுள்ளது. புதிய வைரஸ் பரவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் தேசிய நோய் தடுப்பு மையம், நிலைமைய கண்காணித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதாகவும் தெரிவித்துள்ளது.