செல்போன் கூகுள்
ஹெல்த்

செல்போன் பார்க்கும் குழந்தைகள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

செல்போன்களில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்ப்பதால் சிறுவர்களுக்கு அதிகளவில் கண் தொடர்பான பிரச்சினைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

PT WEB

செல்போன்களில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்ப்பதால் சிறுவர்களுக்கு அதிகளவில் கண் தொடர்பான பிரச்சினைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வீடியோக்களை பார்க்கும்போது கண்களை இமைப்பது பாதியாக குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இமைப்பது குறைவதால் கண்கள் உலர்ந்து போயிருக்கும் நேரம் அதிகரிப்பதாகவும், இதுவே பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.

model image

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூட்யூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்த்துவிட்டு கண்கள் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதில் சிறுவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் மிகக்குறைந்த வயதிலேயே கிட்டப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி போட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண் பிரச்சினைகள் தவிர தலைவலி, தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கண் மருத்துவ கருத்தரங்கில் இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.