model image meta ai
ஹெல்த்

’குழந்தைகள் அதிகம் கைப்பேசி பார்த்தால்...’ - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சிறார்கள் அல்லது குழந்தைகள் அதிக நேரம் ரீல்ஸ் பார்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் மூளையை கெடுக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Prakash J

கைப்பேசி பார்க்கும் குழந்தைகள் உணர்ச்சிவசப்படுவதோடு, புதிய வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. மேலும் குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மொபைல், கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதில் செலவிடும் நேரமே திரைநேரம் எனப்படுகிறது. அதிகப்படியான திரைநேரமே குழந்தைகளின் தூக்கமின்மை மற்றும் தூக்கக் குறைபாடுகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது. 2025ஆம் ஆண்டு 7 ஆயிரம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி கைப்பேசி திரையில் ஓடும் சிறுசிறு காணொளிகள், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளைப் போலவே சிறார்களின் மூளையின் செயல்திறனை மழுங்கடிக்கின்றன என்றும், இதனால் மூளையின் 'வெண் பொருள்' குறைகிறது என்றும் இது கற்றல் திறன், நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைப் பறித்துவிடுகிறது என்றும் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, குழந்தைகளுக்கு 'கவனக்குறைவு அதீதசெயல்பாடு கோளாறு' ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செல்போன்

கைப்பேசி பார்க்கும் குழந்தைகள் உணர்ச்சிவசப்படுவதோடு, புதிய வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. மேலும் குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் அதிகநேரம் குனிந்து, செல்போனைப் பார்ப்பதால், அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகள் உறங்கும் முன் கைப்பேசியைத் தொடவே கூடாது. தேவையற்ற மற்றும் குழந்தைகளைஅடிமையாக்கும் செயலிகளை நீக்கவேண்டும். வீட்டுப்பாடங்களைச் செய்ய செயற்கை நுண்ணறிவு கருவிகளை அனுமதிக்காமல் குழந்தைகள் சிந்தித்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும். சிறார்கள் சிக்கல்களுக்குத் தாங்களாகவே தீர்வுகளைக் காணும்போதுதான் மூளை வலிமையாகும்.