கேன்சர் சிகிச்சை முறை முகநூல்
ஹெல்த்

புற்றுநோய்|ஆறுதல் தரக்கூடிய ஒரு செய்தி; பலன்கொடுக்கும் சிகிச்சை முறை!

இந்தியாவில் பரிசோதனை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட 73% பேருக்கு நோயிலிருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PT WEB

புற்றுநோய் அதிகரிப்பது குறித்து வெளியாகி வரும் பல தகவல்கள் கவலை தருகிறது. ஆனால் ஆறுதல் தரக்கூடிய ஒரு செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.

புற்றுநோயை குணப்படுத்துவதற்காக இந்தியாவில் சோதிக்கப்பட்டு வரும் CAR T CELL தெரபி என்ற சிகிச்சை முறை நல்ல பலனை அளித்துள்ளதாக உலகப்புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரிசோதனை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 73% பேருக்கு நோயிலிருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிமரிக் ஆன்டிஜன் ரிசப்டார் டி செல் தெரபி என்பதன் சுருக்கமே CAR T CELL தெரபி எனப்படுகிறது. புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை பழக்கப்படுத்துவதே இச்சிகிச்சையின் அடிப்படையாகும். CAR T CELL தெரபி முறை சிகிச்சை குறித்து உலகெங்கும் சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் கிடைத்துள்ள முடிவு தரமானது, செலவு குறைவானது என லான்செட் இதழ் குறிப்பிட்டுள்ளது.