பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 வயது முதல் 30 வயதுள்ளவர்களின் மூளையில் மிகச்சிறிய அளவு மின்சாரத்தை செலுத்தியபோது உள்ளே மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இதனால் கணித அறிவு, கற்றல் திறன், நினைவாற்றல், கவனக்குவிப்பு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 5 நாட்களுக்கு 72 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.