ஹெல்த்

கோடையை குளிர்விக்கும் மாம்பழத்தை சாப்பிடுவது எப்படி? - ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்

Sinekadhara

சம்மர் சீஸனை மாம்பழ சீஸன் என்றும் அழைப்போம். அதற்கு காரணம் இந்த கோடைகாலத்தில்தான் இனிப்பான, ஜூஸியான மாம்பழங்கள் பல்வேறு வகைகளில் நமக்கு கிடைக்கின்றன. சிலருக்கு மாம்பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ஜூஸாக குடிக்கப் பிடிக்கும். மாம்பழம் சுவையாக இருப்பது மட்டுமன்றி அதில் பல்வேறு சத்துகளும் உள்ளன. குறிப்பாக கோடை வெயிலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. மேலும் செரிமானத்தை தூண்டுகிறது. நீரிழிவு மற்றும் இதயம் நோய்களை தடுக்கிறது.

ஆனால் மாம்பழத்தை சரியான முறையில் சாப்பிடுகிறோமா? என்பது குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஆயுர்வேத நிபுணர். மாம்பழத்தை சாப்பிடுவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பே அதை தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். இதனால் பழத்திலுள்ள அதீத பைடிக் அமிலம் ( ஊட்டச்சத்து தடுப்பான்) வெளியேறிவிடும்.

சரியான முறையில் மாம்பழத்தை சாப்பிடுவது எப்படி?

மாம்பழத்தை காலை உணவாகவோ அல்லது மதிய உணவிற்கு இடையிலோ அல்லது மாலை நேரத்திலோ ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். அதில் பால் சேர்த்து பழக்கூழாகவும் சாப்பிடலாம். பாலையும், பழங்களையும் தனித்தனியாக சாப்பிடச் சொல்கிறது ஆயுர்வேதம். எனினும், இனிப்பான அல்லது பழுத்த அவோகடோ பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது பாதுகாப்பானதுதான். மாம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை கூடுவதுடன் சரும நிறத்தை மெருகூட்டி, உடலையும் குளிர்ச்சியாக்குகிறது.

இருப்பினும், வளர்சிதை மாற்ற குறைபாடு அல்லது செரிமானக் கோளாறு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு அல்லது தோல் பிரச்னைகள் உள்ளவர்கள் மாம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. பொதுவாக பழங்களை உணவுக்குப்பின் எடுத்துக்கொள்வதை ஆயுர்வேதம் அனுமதிக்கிறதில்லை. இருப்பினும் உணவுடன் பழக்கூழ் சாப்பிடுவது வயிற்றுப்பொருமலை தடுக்கும்.