டீ, காபியுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அது என்ன பார்க்கலாம்.
குறிப்பாக, டீ, காபியுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமிலம் அதிக அளவு சுரந்து, அஜீரணத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
அதேபோல, டீ, காபியுடன் இரும்புச் சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், சாலட் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள். மேலும், ஆல்கஹால், சாக்லெட், ஐஸ்கிரீம், புதினா, தயிர் போன்றவற்றையும் டீ, காபியுடன் சேர்ந்து சாப்பிடாமல் இருப்பது நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.