2 வயது குழந்தைக்கு உயிர் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!
2 வயது குழந்தைக்கு உயிர் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்! Twitter
ஹெல்த்

நடுவானில் மூச்சுவிட முடியாமல் தவித்த குழந்தை; உரிய நேரத்தில் உயிரை காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

PT WEB

கர்நாடகாவின் பெங்களூருவிலிருந்து டெல்லி சென்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை தனது எக்ஸ் வலைத்தள பதிவில் இதனை பதிவிட்டுள்ளது. அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் , விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு வயது பெண் குழந்தை சுவாசிக்க முடியாமல் இருந்த நிலையில் , விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் குழு, குழந்தைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றியதாக பதிவிடப்பட்டுள்ளது.

தகவலின் படி இரண்டு வயது பெண் குழந்தை சுயநினைவை இழந்து, சுவாசிக்காமல் உடல் குளிர்ந்த நிலைக்கு சென்றதாகவும் உடனடியாக குழந்தையின் தாய் விமான குழுவிடம் தகவல் தெரிவிக்க , விமானம் நாக்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இதற்கிடையில் விமானத்தில் இருந்த பயணிகளிடம் மருத்துவர்கள் யாரேனும் உள்ளனர்களா என விமான குழு உதவி கோரினர்.

2 வயது குழந்தைக்கு உயிர் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

அச்சமயம் பெங்களூருவிற்கு பணி தொடர்பாக சென்று டெல்லி திரும்பி இருந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஐந்து பேர் உடனடியாக குழந்தைக்கு முதலுதவி அளித்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் இந்த உதவியால் குழந்தை காப்பாற்றப்பட்டு விமானம் தரை இறங்கிய பின்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவர்கள் இந்த செயல் பல்வேறு தரப்பினரையும் பூரிப்படைய செய்துள்ளது. அத்துடன் குழந்தைக்கு முதலுதவி அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.