10 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதாக ஆய்வு
10 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதாக ஆய்வு  புதிய தலைமுறை
ஹெல்த்

உட்கார்ந்துகிட்டே இருக்காதீங்க... உங்களுக்குத்தான் ஆபத்து....!

PT WEB

வளர்ந்த நாடுகளில் மக்கள் கம்ப்யூட்டர் முன்பாகவோ, போக்குவரத்து நெரிசலிலோ, டிவி முன்பாகவோ ஒருநாளைக்கு 10 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உட்கார்ந்தபடி இருக்கிறார்கள். நார்வேயில் இரண்டு ஆய்வுகள், சுவீடன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒரு ஆய்வு என குழுவாக பிரிந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2003 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் 12,000 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கல்வி, வாழ்க்கை முறை, நோய்கள் என பலவித கூறுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில்தான் மக்கள் பல்வேறு காரணங்களுடன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உட்கார்ந்தபடி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

ஆய்வுக்காலத்தில் இவர்களில் 805 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு 12 மணிநேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

8 மணி நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களை விட, 10 மணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு 38% அதிக அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தினசரி 22 நிமிடங்களுக்கு மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த அபாயங்கள் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினசரி வாழ்க்கையில் மதிய உணவு நேரத்தில் நடப்பது, படிகளில் ஏறுதல், அன்றாடம் நடைபயிற்சி போன்ற எளிய நடைமுறைகள் கூட, ஆரோக்கியமான உடலுக்கான தீர்வாக இருக்குமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் இனி, உட்கார்ந்தே இருக்காதீர்கள்.