தூக்கமின்மை பிரச்னை fb
ஹெல்த்

இரவில் தூக்கமின்மையா? 10 நிமிடங்களில் தூங்கவைக்கும் புதிய உத்தி!

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ‘பப்பி பாஸ்’ (Puppy Paws) என்ற புதிய தூக்க உத்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PT WEB

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ‘பப்பி பாஸ்’ (Puppy Paws)என்ற புதிய தூக்க உத்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ‘பப்பி பாஸ்’ (Puppy Paws)என்ற புதிய தூக்க உத்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டிகள் அல்லது நாய்கள் தங்கள் முன்னங்கால்களை மார்புக்குக் கீழே மடித்து வைத்துக்கொண்டு தூங்குவதைப் போன்ற ஒரு நிலையை இது குறிக்கிறது. அதாவது, குப்புறப் படுத்துக்கொண்டு அல்லது ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, மணிக்கட்டுகளை மார்புக்கு அடியில் மென்மையாக மடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தூக்கமின்மை பிரச்னை

இந்த உடல் நிலை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘ஸ்வாட்லிங்’ (Swaddling)போன்ற ஒரு பாதுகாப்பான உணர்வைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, 10 முதல் 15 நிமிடங்களுக்குள் தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், கழுத்து வலி, முதுகுத்தண்டு பாதிப்பு அல்லது மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.