ஐசிஎம்ஆர்–இந்தியாபி ஆய்வில், இந்தியர்களில் 87.3% பேருக்கு ரத்தக் கொழுப்பு சீர்கேடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 66.8% பேருக்கு ஹெச்டிஎல் குறைவு, 49.4% பேருக்கு எல்டிஎல் அதிகம், 22.1% பேருக்கு மொத்த கொழுப்பு உயர்வு எனத் தரவு காட்டுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 94.3% பேரும், சாதாரண எடை கொண்டவர்களில் 85% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் (ICMR), இந்தியாபி (INDIAB) நடத்திய தேசிய அளவிலான புதிய ஆய்வில், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 பேர்களில் 9 பேருக்கு ரத்தத்தில் கொழுப்புப் படிவ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 87. 3 சதவீத இந்தியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்படி, உடலுக்கு நன்மை செய்யும் ஹெச்டிஎல் (HDL) கொழுப்பு 66. 8 சதவீதப் பேருக்குக் குறைவாக உள்ளது. தீமை செய்யும் எல்டிஎல் (LDL) கொழுப்பு 49. 4 சதவீதப் பேருக்கும், ட்ரைகிளிசரைடுகள் (tryglyceride) 29.5 சதவீதப் பேருக்கும், மற்றும் மொத்த கொழுப்பின் அளவு 22 .1 சதவீதப் பேருக்கும் அதிகமாக உள்ளது.
உடல் எடையைப் பொறுத்தவரை, உடல் பருமன் உள்ளவர்களில் 94.3% பேருக்கும், சாதாரண உடல் எடை கொண்டவர்களில் 85 சதவீதம் பேருக்கும் இந்தப் பாதிப்பு உள்ளது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் 89. 8 சதவீதப் பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் இந்த 'அமைதியான ஆபத்தை' முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மட்டுமே தடுக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.