கோப்புபடம் Reuters
ஹெல்த்

"தமிழகத்தில் 43.3% குழந்தைகளுக்கு ரத்த சோகை" - ஐசிஎம்ஆர் ஆய்வு

அதில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு, ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

PT WEB

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 43.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 மாநிலங்களில் உள்ள, 183 மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு, ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அந்த விகிதம் 55.9 சதவீதமாக உள்ளது. பள்ளிச் சிறார் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை தேசிய சராசரியை விட தமிழகம் மேம்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 5 முதல் 9 வயது வரையிலான சிறார்களில் 22.2 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில், ஒரு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை எடுத்துக்கொண்டால் 43.3 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பதிவாகியுள்ளது. இது தேசிய சராசரியை விட 2 சதவீதம் அதிகம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஊட்டச்சத்து சிகிச்சையை முறையாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு சீராகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.