சிறப்புக் களம்

சொல்லி அடி – பாகம் 5

சொல்லி அடி – பாகம் 5

webteam

பெற்றோர் ஒருவர் தனது மகனை பன்னிரெண்டாவது முடித்தால் போதும் நீ கல்லூரிக்கு போக வேண்டாம் என்கிறார். அந்த மாணவனோ, ஆமாம் அப்பா கல்லூரியில் எந்த பிரிவில் படித்தாலும் வேலை கிடைப்பதில்லையாம், பணத்தையாவது மிச்சப்படுத்தலாம் என்கிறான். எப்படியாவது என் மகனை கஷ்டப்பட்டு கல்லூரியில் படிக்க வைப்பேன் என்று சொல்லும் பெற்றோர்களே, இந்த மாற்றத்திற்கு வந்திருக்கிறார்கள். 

இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இன்று “சொல்லி அடி” ப்போம்.

1. என்ஜினீயரிங் படித்தவர்களில் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்களே ?
                                 என்ஜினீயரிங் படித்ததால் வேலைகிடைக்கவில்லை என்று சொல்வது தவறு. என்ஜினீயரிங் படிப்பை சரிவர படித்திருந்தால், நிச்சயமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அளவிற்கு திறமை ஏற்பட்டிருக்கும். 

2. ஏன் அப்ரண்டீஸ் பயிற்சிக்குப் பின் சரியான வேலை கிடைப்பதில்லை ?
                                அப்ரண்டீஸ் பயிற்சி என்பது நம் அறிவுத்திறனை வளர்த்திக்கொள்வதற்காக மட்டுமே. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இல்லை. 

3. ஏன் பல நிறுவனங்கள் என்ஜினீயரிங் படித்தவர்களை எடுக்க தயங்குகிறார்கள் ?
                                   என்ஜினீயரிங் படித்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. 

4. அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சென்றால், நன்மையா ?
                                   வேலையில்லாமல் இருக்கிறேன் என்று சொல்வதற்கு பதில் சம்பளத்துடன் பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம். நன்மை என்பது நாம் கற்றுக்கொள்ளும் விதங்களில் இருக்கிறது. 

5. வங்கித்தேர்வுக்கும், அரசுத்தேர்வுக்கும் இரண்டு வருடமாக படித்தேன். தற்போது வேலை கிடைக்க சிரமமாக இருக்கிறது ?
                                   அரசு அல்லது வங்கித்தேர்வுக்கு தயார் ஆவது தவறு இல்லை. வேலைக்கு சென்றுகொண்டே படித்திருந்தால் அனுபவமும் கிடைத்திருக்கும். 

6. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு மிகக் குறைவான சம்பளம் தான் தருகிறார்கள் ?
                                   என்ஜினீயரிங் படித்தவுடன் அதிக சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. அனுபவமும், திறமையும் நிச்சயம் ஒரு நாள் அதிக சம்பளத்திற்கு கை கொடுக்கும். 

மேலும் இதுபோன்ற கேள்விகள் உங்களிடம் இருந்தால் எழுதி அனுப்பலாம்  Puthiyathalaimurai.karthik@gmail.com  . அடுத்த வாரம் வேறு வழிகளில் “சொல்லி அடி”ப்போம்…
                                                                                                                                                                                                                (தொடரும்)