சிறப்புக் களம்

''உங்களது பிரைவசி பாதிக்கப்படாது!'' - விளக்கங்களை அடுக்கிய வாட்ஸ்அப் - முழு விவரம்

webteam

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ''எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கிறோம்" என தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

  • தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது.
  • உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது. எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது.
  • உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது.
  • உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும்.
  • உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம்
  • எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம்.

தகவலை பெறுவது எப்படி?

வாட்ஸ் அப் Settings > Account > Request account info.

Download report என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஸிப் ஃபைல் ஒன்று டவுன்லோட் ஆகும்.

அது டவுன்லோட் ஆனதும், Export report என்பதை க்ளிக் செய்து எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அதனை வாட்ஸ் அப்க்குள் பார்க்க முடியாது. அதனை மெயில் மூலமாகவோ அல்லது உங்களது தனிப்பட்ட இடங்களிலோ அனுப்பி சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நீங்கள் டவுன்லோட் செய்தபிறகு டெலிட் செய்துகொள்ளும் ஆப்ஷனும் உள்ளது. இந்த வசதி செல்போனில் மட்டுமே. கணினியில் இணைக்கப்படும் வாட்ஸ் அப் வெப்பில் இல்லை.