உலக சுகாதார நிறுவனம், கத்தாரில் நான்கு வாரங்கள் நடைபெறக்கூடிய FIFA உலகக்கோப்பையை காண கூடியிருக்கும் 1.2 மில்லியன் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உலகக்கோப்பை கூடுகையானது, கேமல் ஃப்ளூ தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. உயிர்கொல்லி வைரஸான கேமல் ஃப்ளூவால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு விகிதத்தார் உயிரிழக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியிருக்கிறது.
Middle East Respiratory System அல்லது MERS என்று அழைக்கப்படக்கூடிய இந்த தொற்று குறித்து புதிய நுண்ணுயிரிகள் மற்றும் புதிய தொற்றுகள் இதழில் விளக்கப்பட்டுள்ளது. இந்த கேமல் ஃப்ளூவானது கொரோனா, குரங்கம்மை உள்ளிட்ட 8 முக்கிய தொற்றுகள் பரவ வழிவகுக்கும் என தெரிவித்திருக்கிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான FIFA-வை காண உலகின் பல நாடுகளில் இருந்து கூடியிருக்கும் மில்லியன்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறியுள்ளது.
மேலும், உலகக்கோப்பை மைதானத்தில் கூடும் அதிகப்படியாக கூட்டத்தால் விளையாட்டு வீரர்கள், குழுக்கள், ரசிகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அச்சுறுத்தும் நோய்த்தொற்றுகள் பரவுவது தவிர்க்கமுடியாதது என்றும் கூறியுள்ளது அந்த ஆய்வு. மேலும், MERS-ஆனது எதிர்காலத்தில் கொரோனாவைப் போன்று மிகப்பெரிய தொற்றுப்பரவலாக மாறக்கூடிய வைரஸ் என்று உலக சுகாதார துறை சமீபத்தில் எச்சரித்திருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.
கேமல் ஃப்ளூ என்றால் என்ன?
ஜூனோடிக் நோயான கேமல் ஃப்ளூவானது சவுதி அரேபியா, ஜோர்டன் மற்றும் ஏமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் 2012ஆம் ஆண்டு பரவியது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பயணத்தவர்களால் ஐரோப்பிய நாடுகளிலும் சிலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த தொற்றால் மனிதர்கள் மட்டுமல்லாமல் ஒட்டகங்களும் பாதிக்கப்பட்டது.
MERS தொற்று எப்படி பரவுகிறது?
கொரோனா வைரஸ் தொற்று போன்றே MERS தொற்றும் MERS-CoV என்ற வைரஸால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்கிறது Medline Plus. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை இந்த தொற்று எளிதில் தாக்கக்கூடியது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு எத்தனை நாட்களுக்கு பிறகு தொற்றின் அறிகுறிகள் தென்படும் என்பது குறித்த கால இடைவெளி இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
MERS அறிகுறிகள்
அறிகுறிகளற்ற கொரோனா தொற்றை போன்றே, MERS தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அறிகுறிகள் தென்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்ட 1-2 வாரங்களுக்குள் சில அறிகுறிகள் தென்படும் என்கின்றனர். சில பொதுவாக அறிகுறிகள்,
அதேசமயம் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு, கேன்சர் அல்லது நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு தொற்றின் தன்மை தீவிரமாக இருக்கும். அவர்களுக்கு,
கேமல் ஃப்ளூவிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
கத்தாரில் இருப்பவர்கள் மற்றும் விளையாட்டை நேரில் காண கத்தார் செல்லவிருப்பவர்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
MERS சிகிச்சை முறைகள்
MERS தொற்றுக்கென குறிப்பிட்ட மருந்து இல்லை என்றாலும், சில சிகிச்சை முறைகள் தொற்றிலிருந்து விடுபட உதவும்.
1. வலி மருந்துகள்: analgesics வலி நிவாரணிகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது வலி மற்றும் காய்ச்சலுக்கு தீர்வு கொடுக்கும்.
2. பெட் ரெஸ்ட்: தனிமையில் படுக்கையில் ஓய்வெடுப்பது வியாதியிலிருந்து விரைவில் குணமடைய உதவும்.
3. IV திரவங்கள்: இந்த திரவங்கள் உடல் வறட்சியடையாமல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது.
4. ஆக்சிஜன்: மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுபவர்களுக்கு சில நேரங்களில் மருத்துவர்கள் ஆக்சிஜன் அல்லது வெண்டிலேட்டர் சப்போர்ட்டை கொடுப்பர்.
5. வாசோபிரசர் மருந்து: இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.