விஜய் மல்லையா! இந்த பெயர் எப்போதுமே இந்திய அரசியலில் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான விட்டல் மல்லையாவின் மகன்தான் விஜய் மல்லையா. 28 வயதிலேயே இவருக்கு அவர்களின் குடும்ப நிறுவனமான யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பு கிடைக்கிறது. மிக இளம் வயதில் பாரம்பரிய நிறுவனத்திற்கு தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு கிடைக்கப்பெற்றாலும் அதை மிகச்சிறப்பாக கையாண்டவர்தான் விஜய் மல்லையா.
ஆனால், அவருடைய சரிவு தொடங்கிய காலம் கிங் பிஷர் விமான நிறுவனத்தை கூறலாம். 2003 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்கினாலும் 2005 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்த நிறுவனத்தை கடுமையாக பாதித்தது. அதன் தொடர்ச்சி 2012 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக பல்வேறு வங்கிகளில் விஜய் மல்லையா கடன் வாங்கியிருக்கிறார். இந்த கடன்கள்தான் வாரக்கடன்களாக மாறி அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
முதலில் வாராக்கடன் என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வங்கிகளில் பெற்ற கடனை ஒரு தனிநபரோ அல்லது ஒரு தொழில் நிறுவனமோ செலுத்த தவறினால், அந்த தொகை வாராக்கடன் என்று எடுத்து கொள்ளப்படும். அதனை திரும்ப பெற வங்கிகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாலும், மொத்த பணமும் திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த கடன்களை வசூலிக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு உதவி செய்யும் விதமாக தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆா்சிஎல்) மற்றும் இந்திய கடன் தீா்வு நிறுவனம் (ஐடிஆா்சிஎல்) ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு வங்கிகள் வழங்கிய வராக்கடனை பெற்றுக்கொண்டு அந்த தொகையில் 15% வரை வங்கிகளுக்கு முதலில் வழங்கிவிடும். அதை தொடர்ந்து வாராக்கடனை மேற்கொண்டு வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். இந்த முதலில் வழங்கப்படும் 15% தொகை என்பது வங்கிகளுக்கு வராக்கடன் சுமைகளை ஓரளவுக்கு குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான பாட்காஸ்டில் விஜய் மல்லையா தான் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை என்றும் கிங் ஃபிஷர் நிறுவனம் தான் வாங்கியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
சரி இப்போது விஜய் மல்லையா கதைக்கு வருவோம்.
சமீபத்தில் வெளியான பாட்காஸ்டில் விஜய் மல்லையா தான் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை என்றும் கிங் ஃபிஷர் நிறுவனம் தான் வாங்கியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஒருவகையில் பார்த்தால் அவர் கூறியது சரிதான். இந்த கடன் முழுவதும் கிங் ஃபிஷர் நிறுவனம் பெயரில்தான் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கடன்களில் பலவற்றிற்கு விஜய் மல்லையா தனிப்பட்ட உத்தரவாதங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். மேலும் விஜய் மல்லையா அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல - முழு செயல்பாட்டுக் கட்டுப்பாட்டையும் பயன்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்திருக்கிறார்.
அவர் வழங்கிய உத்திரவாதத்தின் அடிப்படையிலேயே கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு வங்கிகள் கடன்களை வழங்கியுள்ளது. இப்படி ரூ.6000 கோடி வரையிலான கடன்களை 12க்கும் மேற்பட்ட வங்கிகளிடம் இருந்து விஜய் மல்லையா பெற்றதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையாவும் அதை ஏற்றுக்கொள்கிறார். மேலும் அந்த 100% கடனையும் திருப்பி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவற்றை பெற்றுக்கொண்டு தன்னை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
கடன் வாங்கிய நபர் அனைத்து தொகையையும் வழங்க முன்வந்தும் நிறுவனங்கள் மறுக்க என்ன காரணம் என்கிற கேள்விகள் அனைவருக்கும் எழலாம். இங்குதான் மல்லையா தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்த பார்த்திருக்கிறார். அதாவது தான் பெற்ற கடன்தொகையை மட்டுமே அவர் வழங்க முன்வந்து இருக்கிறார். அதற்கான வட்டி, அபராத தொகை மற்ற பிற கட்டணங்களை செலுத்த மறுத்திருக்கிறார். இங்குதான் விஜய் மல்லையாவுக்கு வங்கிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, எந்தவொரு கடனும் தொகை முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. மல்லையா போன்ற கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு, அபராத வட்டியும் உண்டு. அதன்படி விஜய் மல்லையா பல்வேறு வங்கிகள் மூலம் ரூ. 6848 கோடி கடன் வாங்கியிருந்தாலும் வட்டி மற்றும் பிற கட்டங்களாக ரூ. 10,933 கோடி சேர்த்து ஒட்டுமொத்தமாக 17,781 கோடி கடன்தொகை திரும்ப செலுத்த வேண்டும். இவற்றில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை கைப்பற்றி விற்றதன் மூலம் இதுவரை 10,815 கோடி வசூலிக்கப்பட்டு விட்டது என்றும் மீதம் ரூ.6,997 கோடி நிலுவையில் உள்ளது என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குகள் படி, ஒவ்வொரு வங்கியிடம் இருந்தும் விஜய் மல்லையா எவ்வளவு தொகை வாங்கியிருக்கிறார் அதற்கான வட்டி என்ன அதில் எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்களும் வெளியாகியுள்ளது.
அதன்படி விஜய் மல்லையாவுக்கு அதிகபட்ச கடன்தொகை வழங்கிய வங்கி SBI தான். இந்த வங்கியிடம் இருந்து விஜய் மல்லையா ரூ. 1939 கோடி கடன் பெற்றுள்ளார். இவற்றுக்கு ரூ.3,269 கோடி வட்டி மற்றும் இதர கட்டணங்களுடன் சேர்த்து 5,208 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். இதில் 3,174 கோடி மட்டுமே விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்றதன் மூலம் திரும்ப பெறப்பட்டிருக்கிறது.
அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து 1,197 கோடி கடனாக பெற்று இருக்கிறார். இதற்கு 1,887 கோடி வட்டி மற்றும் பிற கட்டணங்களுடன் சேர்த்து 3084 கோடி கட்ட வேண்டும் ஆனால் இதில் 1,910 கோடி மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது
அடுத்து IDBI வங்கியிடம் இருந்து 939 கோடி கடனாக பெற்ற நிலையில் இதர கட்டணங்களுடன் சேர்த்து 2,390 கோடி திருப்பி செலுத்த வேண்டும். அதில் இருந்து 1,375 கோடி மட்டுமே திருப்பு வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து 708 கோடி கடன் வாங்கிய நிலையில் இதர கட்டணங்களுடன் சேர்த்து 1,759 கோடி திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் சொத்துக்களை கையகப்படுத்தியதன் மூலம் 1,034 கோடி மட்டுமே திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது.
பேங்க் ஆப் பரோடா வங்கியிடம் இருந்து 605 கோடி வாங்கிய நிலையில் வட்டி மற்றும் பிற கட்டணங்களாக 975 கோடி ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 1580 கோடி கட்ட வேண்டும் என்றும் அதில் 994 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கிகள் தரப்பில் இப்படியான தரவுகள் வெளியானதாக சொல்லப்படும் நிலையில் விஜய் மல்லையா பேசிய பாட்காஸ்டில் 6 ஆயிரம் கோடி கடனுக்கு 14 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறியது எப்படி என்கிற கேள்வி எழுப்பப்படலாம். அதற்கான பதில் கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய உரையில் இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடியாகும். அதில், விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.14,000 கோடியும் அடங்கும் என கூறினார்.
இந்த அடிப்படையில்தான் விஜய் மல்லையா தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். பலரும் விஜய் மல்லையா இப்படி தான் தவறு செய்யவில்லை என குற்றச்சாட்டு வைப்பது முதல்முறை எனக்கூறினாலும் முழுவதுமாக அது உண்மை கிடையாது. பல்வேறு காலகட்டங்களில் டிவிட்டரில் ( தற்போது எக்ஸ் வலைத்தளம்) தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு மத்திய அமைச்சரின் நாடாளுமன்ற உரைக்கு பின்னரும் கூட கிங் ஃபிஷர் ஏர்லைனின் மொத்த கடன் வட்டித் தொகை ரூ. 1,200 கோடியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் எனது சொத்துகள் ரூ. 14,131 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆனால் நான் இன்னும் பொருளாதாரக் குற்றவாளியாக உள்ளேன். எனது கடன் தொகையைவிட இரு மடங்குக்கு மேல் வசூலிக்கப்பட்டதை அமலாக்கத்துறையும் வங்கியும் நியாயப்படுத்தவில்லை என்றால் நிவாரணம் கேட்க எனக்கு உரிமை உண்டு என கூறியிருந்தார்.
பணம் திருப்பி செலுத்திய முறைகளும் கூட அரசு உத்தரவில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏழாம் விடப்பட்டதால் மூலம் மட்டுமே பெறப்பட்டவை. விஜய் மல்லையா தாமாக முன்வந்து வழங்கியது கிடையாது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
அதாவது உண்மையில் தான்தான் பாதிக்கப்பட்டதாகவும் இதற்காக வங்கிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விஜய் மல்லையா கூறுவது முதல்முறை கிடையாது என்பது இதன்மூலம் தெரியவரும்.
மேலும் பணம் திருப்பி செலுத்திய முறைகளும் கூட அரசு உத்தரவில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏழாம் விடப்பட்டதால் மூலம் மட்டுமே பெறப்பட்டவை. விஜய் மல்லையா தாமாக முன்வந்து வழங்கியது கிடையாது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
அப்படியென்றால் வங்கிகள் கூறியிருக்கும் கணக்கின்படி வட்டி அபராத தொகையுடன் சேர்த்து ஒட்டுமொத்த தொகையும் முழுவதுமாக வசூலிக்காத வரை விஜய் மல்லையா மீதான விமர்சனங்கள் வைக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும் என்பதுதான் தற்போதைய குழப்பங்களில் இருந்து தெரியவரும் செய்தி.