சேலத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஒருவர் 5 வகையான கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார்.
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கலை கற்றுக்கொடுத்து வருகிறார். இவர் கின்னஸ் அமைப்பின் முறையான அனுமதி பெற்று இன்றைய தினம் தனது சாதனை நிகழ்ச்சியை செய்து முடித்துள்ளார். இவர் 650 ஸ்ட்ராவை (உறிஞ்சு குழல்) கையால் பிடிக்காமல் தனது வாயில் 2.10 நிமிடம் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 459 ஸ்ட்ராவை வாயில் நுழைத்து 10 வினாடிவரை வைத்து நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
அதேபோல் 496 ஸ்ட்டாவை கையால் பிடித்து வாயில் 10 வினாடி வைத்து ஏற்கெனவே நடத்தப்பட்ட சாதனையை முறியடிக்கும் விதமாக 692 ஸ்ட்ராவை கையால் பிடித்துக்கொண்டு வாயில் 2.56 நிமிடம் வைத்து சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 4 அங்குல ஆணிகளை 30 வினாடியில் 15 முறை மூக்கில் நுழைத்து சாதனை படைத்ததை முறியடிக்கும் விதமாக நாடராஜ் அதே அளவுள்ள ஆணியை 18 முறை மூக்கில் நுழைத்து சாதனை நிகழ்த்தினார்.
அதேபோல், 4 அங்குல ஒரு ஆணியை 30 வினாடியில் 32 முழை மூக்கில் நுழைத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கயிற்றை பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கியவாறு 45 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவர் 560 மில்லி லிட்டர் வரை குடித்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அரசு தனக்கு உதவி செய்தால் இன்னும் அதிக அளவிலான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்துவேன் என்று நடராஜ் உறுதிபட தெரிவித்தார்.
தகவல்கள் : மோகன்ராஜ் - செய்தியாளர், சேலம்.