சிறப்புக் களம்

அம்பேத்கர் எமோஜி: அண்ணலைச் சிறப்பித்த டிவிட்டர்

அம்பேத்கர் எமோஜி: அண்ணலைச் சிறப்பித்த டிவிட்டர்

webteam

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை அடுத்து, சமூக வலைதளமான ட்விட்டர், அம்பேத்கர் எமோஜியை வெளியிட்டது.

#AmbedkarJayanti #DalitlivesMatter #Jaibhim ஆகிய ஹாஷ்டாகுகளைப் பயன்படுத்தும்போது அம்பேத்கரின் சிறு எமோஜி தோன்றுமாறு வடிவமைத்துள்ளது.

டிவிட்டர் இந்தியாவின், அரசு, கொள்கை, பொதுமக்கள் பிரிவின் தலைவரான மஹிமா கெளல் இதுகுறித்து பேசும்போது, ”இந்நாட்டின் கட்டுமானத்தில் பெரும்பங்காற்றிய டாக்டர் அம்பேத்கர் குறித்த உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த எமோஜியை அளிப்பதில் பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, அம்பேத்கர் மற்றும் அவரது எழுத்துக்கள் குறித்த அதிக விவரங்களை வழங்குவதற்காக “Quest for Equity” என்னும் இணையதளத்தை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.