சிறப்புக் களம்

4000 ஆண்டு கால ’குடை’ கலாசாரமும்.. வரலாற்றில் தொடக்க புள்ளியும்!

webteam

சர்வதேச குடை நாள் (பிப்.10).

குடை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ளது. முதலில் மேற்கு ஆசியாவில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த மெசபடோமியா பகுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது பனை இலையைக்கொண்டும் பாப்பிரஸ் மற்றும் மயில் இறகினாலும் செய்யப்பட்டது.  சைனாவில்  மூங்கில்களை குச்சியாக்கி, அதன் மேல் இலைகளையும் , இறகினாலும் மறைக்கப்பட்டு, பயன்படுத்தி வந்தார்கள். பிரஞ்ச் மொழியில் parapluie என்றால் குடை என்று பெயர். அதாவது, para என்றால் பாதுகாப்பு என்று பொருள் . ஈரோப்பில் கருங்காலி மற்றும் கரும்புகளில் அழகாக செதுக்கியும் குடைகளை உபயோகப்படுத்தி வந்தனர். 

குடை அதிகமாக எகிப்து, கிரீஸ் மற்றும் சீனாவில் தான் அதிகமாக புழக்கத்தில் இருந்தது. அவர்கள் மழை மற்றும் வெயில்களிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக பயன்படுத்தினர்.

இந்தியாவில் குடை பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, நம் முன்னோரகள், கோணிகளையும், அடர்த்தி மிகுந்த துணிகளை பயன்படுத்தினர். பின்னர் நாகரீகம் மாற மாற... இந்தியாவில் குடை பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் குடை அந்தஸ்தின் அடையாளாமாகக்கருதப்பட்டது. பேருந்து மற்றும் போக்குவரத்து அதிகம் பயன்படுத்தாத நாட்களில் மக்கள் தங்களின் நீண்ட பயணத்திற்கு பாதுகாப்பாக குடைகளை பயன்படுத்தி வந்தனர்.

ஓவியர்கள் சிலர் தங்களாது ஓவியத்தில் பெருப்பாலும், வயதான மனிதர்களை வரையும்பொழுது, அவர்களின் அடையாளாமாக, அவர்களின் கையில் நீண்ட குடைஒன்றினை வரைய மறப்பதில்லை. அந்தளவிற்கு குடை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்தது.

19 நூற்றாண்டில், நவீன குடைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அதன் பிறகு குடைகள் பலவகை வகைகள் வடிவமக்கப்பட்டன. சிறிய மடக்கு குடை , மரத்துண்டுகளான நீண்ட பெரிய குடை என்றும், பல வண்ணங்களிலும் வடிவமக்கப்பட்டன. குழந்தைகளை கவரும் வகையில் சிறிய, வண்ணங்களைக் கொண்டு அழகிய வேலைப்பாட்டுடன் கூடியதாக குடைகள் தற்பொழுது சந்தைப்படுத்தப்படுகிறது.

இதைத்தவிர, குடைகளின் பயன்பாடு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மழை பாதுகாப்பு, வெயிலிலிருந்து பாதுகாப்பு இதைத்தவிர குடைகளை ஃபேஷன் துணைப் பொருளாகவும் பயன்படுத்தலாம், பல வடிவமைப்புகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் தனிப்பட்ட பாணிகள் மற்றும் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கிடைக்கின்றன. பெரிய வீடுகளில் புல்வெளிகளை அலங்கரிக்கவும், அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

புகைப்படங்கள் எடுக்கும் பொழுது நிழலை வழங்கவும், பாப் வண்ணத்தை சேர்ப்பது போன்றவற்றிலும் குடைகளின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, குடைகள் பலதரப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய பல்துறை மற்றும் நடைமுறைக் கருவிகள், அவை பலருக்கு இன்றியமையாத பொருளாக இருக்கிறது.

சர்வதேச குடை நாளான இன்றே நாம் ஒரு குடை வாங்கி தேவையுள்ளவர்க்கு கொடையை பரிசாக தரலாமே.

ஜெயஸ்ரீ அனந்த்