சிறப்புக் களம்

துணை வட்டாட்சியராகிய நான் !

துணை வட்டாட்சியராகிய நான் !

webteam

ஹலோ... அமெரிக்க அதிபர் ட்ரம்பா... ஆமா... யூ ஆர் டிஸ்மிஸ்.... நீங்க... துணை வட்டாச்சியர்... ???.... சமூகவலைத்தளங்களில் தற்போது துணை வட்டாச்சியர் குறித்த பேச்சு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூகவலைதளவாசிகள் துணை வட்டாசியர் அவதாரங்களை இப்ப ஏன் கையிலெடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு துணை வட்டாச்சியர்கள் உத்தரவிட்டதாக காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் விவாதங்கள் ஒரு புறம் அரங்கேறிக்கொண்டிருக்க இணையதளவாசிகள், மீம்ஸ் மன்னர்கள் துணை வட்டாச்சியர் அவதாரங்கள் எடுத்துள்ளனர். சிலர் இந்த விவகாரத்தை கலாய்த்தும் சிலர் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைதளத்தில் வைரலாகும் சில துணை வட்டாச்சியர் குறித்த கமெண்டுகள் உங்கள் பார்வைக்கு

பெண்: இப்படி என் பின்னாடியே வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா நான் எங்கப்பாக்கிட்ட சொல்ல வேண்டி இருக்கும்.

பையன் : உங்க அப்பா என்ன DSPயா? இதுக்கெல்லாம் பயப்படுவேன்னு நினச்சியா?

பெண் : துணை வட்டாச்சியர்..

பையன் : மன்னிச்சிடு தங்கச்சி.வீடு வரைக்கும் துணைக்கு வரணுமா?என்று பல கலாய்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. 


வேற வேலை வேண்டாம் துணை வட்டாச்சியர் வேலை தான் வேணும் என்று அடம்பிடிப்பவர்கள் இனி அதிகரிக்கலாம் என்ற ட்வீட்களும் ட்ரெண்ட அடிக்கின்றன. இன்னும் சிலர் தங்களது மூளையை கசக்கி பல கமெண்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் தலைவர்கள் கருத்து பதிவிடுவதும் அது தனக்கு தெரியாமல் தனது அட்மின் பதிவிட்டதாகவும் கூறி வந்தனர். இதனை சிலர் ஞாபகப்படுத்தி அட்மின் போய் துணை வட்டாச்சியரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

துணை வட்டாச்சியர் தனது வரம்பை மீறினாரா? அல்லது பலிகடாவா? என்ற கேள்விகளும் தவறாமல் இடம்பெற்றுள்ளது.