pygmy marmoset
pygmy marmoset pygmy marmoset
சிறப்புக் களம்

11 செ.மீ உயரமே கொண்ட உலகிலேயே மிகச்சிறிய குரங்கு.. எங்கு கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

Madhalai Aron

உலகிலேயே மிகவும் சிறிய குரங்கு இனமான, "பிக்மி மார்மோசெட்" (pygmy marmoset) எனப்படும் "செபுல்லா" இனம் கண்டறியப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை இந்த குரங்கினம். இவை பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது.

இவை சுமார் 11 முதல் 15 செ.மீ உயரமே வளரும். இதன் உடலை விட வாலின் நீளம் அதிகம். அதாவது இந்த குரங்கின் வால் சுமார் 17 செ.மீ முதல் 22 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதிகபட்சமாக 100 கிராம் முதல் 120 கிராம் வரையான எடையில் காணப்படும் இந்த குரங்கு, பிறக்கும்போது வெறும் 15 கிராம் எடை மட்டுமே இருக்கும். இதன் ஆயுட்காலம் 11 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

இந்த செபுல்லா குரங்கினம், பசுமையான மற்றும் ஆற்றின் விளிம்பு காடுகளில் காணப்படும். பசுமையான காடுகளில் உள்ள மரங்களில் உள்ள பசைகளையும், கரையான் போன்ற சிறிய பூச்சிகளையும் சாப்பிடும். இந்த குரங்கில் 83%, இரண்டு முதல் 9 பேர்களைக் கொண்ட குழுவாக வாழும். அதில் ஆதிக்கம் செலுத்தும் ஆண், இனப்பெருக்கம் செய்யும் பெண், நான்கு வரையான குட்டிகள் இடம்பெற்றிருக்கும். ஒருசில குழுவில் வயதான குரங்குகளும் இருக்கும். பெண் குரங்கானது வருடத்திற்கு இரண்டு முறை இரண்டு குட்டிகளைப் பிரசவிக்கின்றன.