சிறப்புக் களம்

பட்ஜெட் - சூட்கேஸ் இடையேயான தொடர்பு...!

பட்ஜெட் - சூட்கேஸ் இடையேயான தொடர்பு...!

webteam

மத்திய அரசோ, மாநில அரசுகளோ, பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் ஒரு பெட்டியை வைத்திருப்பது ஏன் என்று தெரியுமா? இப்போது தெரிந்து கொள்வோம்.

அதற்கு பட்ஜெட் என்ற பெயர்தான் காரணம். பிரென்ச் மொழியில் பவ்கெட் என்றால் தோல் பை என்று பொருள். அதிலிருந்துதான் பட்ஜெட் என்ற சொல் உருவானதாகக் கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டிலேயே பிரிட்டன் நிதி அமைச்சர் அந்நாட்டு வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும்போது உதவியாளரிடம் ஓபன் தி பட்ஜெட் என்று கூறினார்.

அதன்பிறகு, 1860-ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த வில்லியம் க்ளேன்டோன், தங்கத்தில் பதிக்கப்பட்டட பிரிட்டன் ராணியின் உருவம் பொறித்த ‌சிவப்பு நிற சூட்கேசை வைத்திருந்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, லண்டனின் டவுனிங் தெருவி‌ல் நாடாளுமன்ற கட்டடம் முன்பாக சூட்கேசை நிதி அமைச்சர்கள் நாலாபுறமும் காட்டியபடி புன்னகைப்பது தொன்று தொட்ட நடைமுறை. அதில் உள்ள அச்சடித்த காகிதங்கள் அடுத்த ஓராண்டில் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது சிறப்பம்சம். அதுவே இன்று வரை நமது நிதியமைச்சர்களுக்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது. பிரிட்டனின் சிவப்பு நிற சூட்கேசுக்கு பதிலாக வண்ணம் மாறினாலும், பட்ஜெட் பாரம்பரியம் தொடரவே செய்கிறது.