சிறப்புக் களம்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 10 பஞ்ச்!

webteam

தமிழ் சினிமாவில் பஞ்சமில்லாத ஒன்று பஞ்ச் டயலாக். அப்படி ’பச்சக்’ என்று மனதில் பதிந்த பத்து பஞ்ச் டயலாக்குகள் இது. ‘ஏம்பா அதை விட்டே, இதை ஏன் விட்டே’ என்று ரசிகசிகாமணிகள் கமென்ட் போட்டால், நான் பொறுப்பல்ல. ஏனென்றால் அசைன்மென்ட் ஐடியாவே, பத்து பஞ்ச்தான்!

1) சபாஷ் சரியான போட்டி!
-இது ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜயந்தி மாலாவும் பத்மினியும் ஆடும் போட்டி நடனத்தின் போது பி.எஸ்.வீரப்பா சொல்லும் பஞ்ச். பட்டி தொட்டியெங்கும் பரபரப்பான இந்த பஞ்ச், இன்றும் நிற்கிறது உயிர்ப்போடு.

2) அழைத்து வரவில்லை, இழுத்துவர செய்திருக்கிறீர்கள்...
-’மனோகரா’வில் சிவாஜிகணேசன் பேசும் கம்பீர வசனம்.

3) பத்த வச்சுட்டியே பரட்டை!
-16 வயதினிலே’ படத்தில் கவுண்டமணி சொல்லும் பஞ்ச்.

4) இதெப்படி இருக்கு?
- ’16 வயதினிலே’வில் ரஜினி டயலாக்.

5) நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி
-பாட்ஷாவில் ரஜினி பேசி பட்டையை கிளப்பிய பஞ்ச். இப்போதும் பவர்புல்லாக இருக்கிறது இந்த டயலாக்.

6) நீங்க நல்லவரா கெட்டவரா?
-கமலின் ’நாயகன்’ படத்தில் இடம்பெறும் பஞ்ச்.

7) நான் போலீஸ் இல்ல, பொறுக்கி
-’சாமி’ விக்ரம்

8) ஒரு வாட்டி முடிவெடுத்தா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
- இது ’போக்கிரி’ விஜய்.

9) என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும், நானா செதுக்கினதுடா...
-பில்லா’வில் அஜீத்.

10) தெறிக்க விடலாமா?
- இது ’வேதாளம்’ அஜீத்.

 -பாணபத்திர ஓணாண்டி.