house
house pt desk
சிறப்புக் களம்

1,700 சதுரடிக்கு செங்கலே இன்றி கட்டப்பட்ட சூப்பர் பட்ஜெட் வீடு... திரும்பும் பக்கமெல்லாம் காற்று!

Kaleel Rahman

கேரள மாநிலம் ஆலப்புலாவில் 1,700 சதுரடியில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சூப்பர் பட்ஜெட் வீட்டைப் பற்றி இந்தத் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வீட்டின் உரிமையாளர் பிரவீன் நம்மிடையே பேசியதில் இருந்தே தொடங்குவோமே...

வித்தியாசமாகவும் இருக்கணும் பட்ஜெட்டும் குறைவா இருக்கணும்!

“புது வீடு கட்டணும்னு ஆசைவந்த பிறகு, வித்தியாசமான வீடு, அதேபோல் படஜெட்டும் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் பிறகு ரமேஷ் என்ற காண்ட்ராக்டரை தொடர்பு கொண்டு, கீழே இரண்டு பெட்ரூம் - மேல ஒரு பெட்ரூம் வேண்டுமென்று சொன்னோம். அதன்பிறகு அவரும் ஒருசில ஐடியா சொன்னார். அதன்படி குறைவான படஜெட்டில் இந்த வீட்டை கட்டியிருக்கோம்” என்றார் வீட்டின் உரிமையாளர் பிரவீன்.

veedu

ஒரேயொரு தூண் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு!

அழகாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கும் இந்த வீட்டிற்கு லோ-பேரிங் பவுண்டேசன் போட்டிருக்காங்க. அதுக்கு மேல பீம் போட்டிருக்காங்க. அவை தவிர இந்த வீட்டின் முகப்பில் ஒரேயொரு தூண் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தூணும் இல்லை. இந்த வீட்டோட காம்பவுண்ட் கேட்டுக்கு ஜிஐ பைப் பயன்படுத்தி பிரேம் பண்ணியிருக்காங்க. காம்பவுண்ட் சுற்றச் சவர் தரையில் இருந்து 4 அடிக்கு சிமெண்ட் பிளாக் பயன்படுத்தியிருக்காங்க. அதுக்கு மேல 3 அடிக்கு க்ரில் போட்டிருக்காங்க. வீட்டுக்குள் நுழைந்தவுடன் சிட் அவுட் ஏரிய இருக்கு. அதன் தரைத்தளத்துக்கு கிளாஸ் ப்னிஸ் வெர்ட்டிபைட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க.

கதவுகளை தவிர வேறு எதற்கும் மரம் பயன்படுத்தப் படவில்லை!

இந்த வீட்ல மொத்தம் 6 கதவுகள் இருக்கு. அந்த 6 கதவும் மரத்தால் செய்யப்பட்டது. இவைதவிர வேறு எதற்குமே மரம் பயன்படுத்தப்படவிலலையாம்! ஃப்ரண்ட் டோரோட நிலை கூட மரம் போலதான் இருக்கும். ஆனால், அது மரம் இல்லையாம். மரத்திற்கு பதிலாக ஜிஐ பைப் பயன்படுத்தி இருக்காங்க. 12-க்கு 10 சைஸ்ல ஒரு ஹால் இருக்கு. இந்த ஹாலோட தரைத்தளத்துக்கு வெர்டிபைட் கிளாஸ் ப்னிஸ் டைல்ஸ் போட்டிருக்காங்க. ஹாலில் இருக்கும் சுவரில் 3ல் 2 பங்கு அளவில் பெரிய ஜன்னல் வச்சிருக்காங்க.

kitchen

ஓப்பன் டைனிங் ஏரியாவுடன் கூடிய கிச்சன்

ஒரு ஓப்பன் டைனிங் ஏரியாவுடன் கூடிய ஓப்பன் கிச்சன் இருக்கு. டைனிங் ஏரியாவையும் ஹாலையும் ஷோகேஸ் வைத்து பிரித்திருக்கிறார்கள். இந்த ஷோகேஸில் கண்ணாடி பயன்படுத்தாததால் இது பார்ப்பதற்கு ஜாலி ஒர்க் போல் அழகாக இருக்கிறது.

அடுத்து, இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம். இங்கு தரைத்தளத்துக்கு மேட் ப்னிஸ் வெர்ட்டிபைட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீடு முழுவதும் வெள்ளை நிறம் கண்ணில் அதிகமாக இருக்கும்படி கலர்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. அதே மாதிரி இங்கே பயன்படுத்தி இருக்குற பெட்சீட் மற்றும் ஒன் சைடு வால் ஆகியவற்றிக்கு ஃபேஷல் கலர் பயன்படுத்தி இருக்காங்க. இது கலர்ஸ்க்கு கொடுத்த முக்கியத்துவத்தை தாண்டி, பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கு. வீடு முழுதும் வெள்ளை நிறமே ஆக்கிரமித்துள்ளதால் வீடு பார்ப்பதற்கு ப்ரைட்டாக இருக்கு. அதேமாதிரி வீடு முழுவதும் பெரிய பெரிய ஜன்னல் வைத்திருக்கிறார்கள். இதற்குமேல் வெளிச்சம் கொண்டுவர முடியுமா என்ற அளவிற்கு வெளிச்சமாக இருக்கிறது.!

பைபர் சிமெண்ட் போர்டு பயன்பாடு!

இந்த வீட்டோட கிச்சன் மாடுலர் கிச்சனா அமச்சிருக்காங்க. கிச்சன் ஸ்லாப்புக்கு கிரானைட் போட்டிருக்காங்க. அதேமாதிரி கிச்சனோட தரைத்தளத்துக்கு செராமிக் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இங்க இருக்குற டைனிங் டேபிள் பார்ப்பதற்கு மரத்தால் செய்யப்பட்டது போல இருக்கும். ஆனால், ஜிஐ பைப்ல ப்ரேம் பண்ணி பைபர் சிமெண்ட் போர்டு பயன்படுத்தியிருக்காங்க. இந்த வீட்டோட மாடிக்குச் செல்லும் படிக்கட்டு பாக்றதுக்கு வித்தியாசமா இருக்கு. இதுல முதல் 3 படிக்கு மட்டும் டைல்ஸ் போட்டிருக்காங்க. அதுக்குமேல எல்லாமே பைபர் சிமெண்ட் போர்டு பயன்படுத்தி இருக்காங்க. பிரேம் முழுவதும் ஜிஐ பைப் பயன்படுத்தி இருக்காங்க.

show case

செராமிக் ரூபிங் டைல்!

வீட்டோட முதல்தள தரை பகுதிக்கு செராமிக் டைல் பயன்படுத்தி இருக்காங்க. அதேமாதிரி வீட்டோட ரூபிங்-க்கு செராமிக் ரூபிங் டைல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த டைல் பயன்படுத்துவதால் 20 முதல் 30 வருடங்கள் ஆனால்கூட கலர் மங்காதாம்! வீட்டோட உள் கூரைக்கு பைபர் சிமெண்ட் போர்டு பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்ல எந்தப்பக்கம் திரும்புனாலும் ஜன்னலாக இருப்பதால், சிலுசிலுவென இருக்கு!

செங்கலுக்கு பதிலாக சிமெண்ட் பிளாக்..

இந்த வீட்டை கட்ட செங்கல் பயன்படுத்தப்படவில்லை, மாறாக சிமெண்ட் பிளாக் பயன்படுத்தி இருக்காங்க.

இந்த வீட்டின் அருகே பேக் வாட்டர் இருக்கு. அதனால் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே அந்த வெப்பத்தை குறைக்கும் வகையில் சீலிங் அமைக்க பைபர் சிமெண்ட் போர்டு பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டோட முக்கிய அம்சம் என்னனா... சுவர் முழுவதும் எழுப்ப சிமெண்ட் பிளாக் பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல் மரத்திற்கு பதிலாக ஜிஐ பைப் பயன்படுத்தி இருக்காங்க. செராமிக் ரூப் டைல் பயன்படுத்தி இருக்காங்க. பைபர் சிமெண்ட் போர்டு பயன்படுத்தி இருக்காங்க.

door

தரைத்தளம் 960 சதுரடி முதல் தளம் 740 சதுரடி என மொத்தம் 1700 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 25 லட்சம்.

இந்த வீட்டோட சிறப்பை, வீடியோ வடிவில் இங்கே பார்க்கலாம்: