சிறப்புக் களம்

ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட சீன பெருஞ்சுவரின் அரிய புகைப்படங்கள்

webteam

உலகின் அதி நீளமான மயானம் என அழைக்கப்படும் சீன பெருஞ்சுவரின் சில அரிய புகைப்படங்கள் ட்ரோன் விமானம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அரணாக கருதப்படும் சீன பெருஞ்சுவர் உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பெருஞ்சுவர் இயற்கை சீற்றங்களையெல்லாம் தாங்கி நிற்கும் பெருமை வாய்ந்தது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 முதல் 8 மீட்டர் வரை (16 – 26 அடி) உயரமும் கொண்டது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு நாளொன்றுக்கு 30,000 பேர் வந்து செல்கின்றன. ஆனால் அனைவரும் பெருஞ்சுவரை மேலோட்டமாக புகைப்படங்கள் எடுத்து செல்வது உண்டு.

முதன்முறையாக, பிரிட்டிஷ் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை வள பாதுகாவலரான வில்லியம் லின்டிசே என்பவர் பெருஞ்சுவரின் மேற்பரப்பில் உள்ள சில அறிய காட்சியினை ட்ரோன் விமானம் மூலம் புகைப்படங்களாக எடுத்துள்ளார். குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அவர் 15,000 கிலோமீட்டர் (9,320 மைல்) பயணிக்கும் ட்ரோன் விமானம் மூலம் சீன பெருஞ்சுவரில் இதுவரை வெளியிடாத பல அறிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.