சிறப்புக் களம்

வேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது?: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..!

வேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது?: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..!

webteam

பல வருடங்களாக வேலை தேடுகிறேன். கிடைக்கவில்லை என்று குமுறும் இளைஞர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். வேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது. அதன் வழிகள் என்ன என்பதை இந்த வார “சொல்லிஅடி” யில் பார்ப்போம்.

1. கல்லூரியில் கடைசி வருடம் தொடங்கும் போது, முதல்கட்டமாக ரெஸ்யூமை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

2. நண்பர்களிடம் வாங்கிய ரெஸ்யூமை எடிட் செய்து நமக்கு ஏற்றவாறி மாற்றியமைப்பதை விட, புதிதாக சிந்தித்து புதிய வடிவில் ரெஸ்யூமை தயார் செய்தால் மிகவும் சிறப்பு.

3. நாம் பயிலும் படிப்புக்கு ஏற்றார் போல் எவ்வளவு நிறுவனங்கள் இருக்கிறது?. அங்கு வேலைவாய்ப்புகளை பெற என்ன வழிகள் இருக்கிறது?. என்ன திறமைகள் இருக்க வேண்டும்? எந்த பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது? என்கிற கேள்விகளுக்கு விடைகளை தேட ஆரம்பிக்க வேண்டும். 

4. ஆங்கிலத்தில் சரளமாக பேச பழகவில்லை என்றாலும், குறைந்தபட்ச ஆங்கில அறிவு இருப்பது மிகவும் அவசியம். 

5. நிறுவனங்களின் திறமை எதிர்பார்ப்புகளை தெரிந்துகொண்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

6. கல்லூரியில் படிக்கும் போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிறுவனங்கள் வந்திருந்தாலும், அந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்வது அவசியம்?

7. படிப்பை முடித்து வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல், நிறுவனங்களை பட்டியலிட்டு அதன் இணையதளத்திலோ, இ-மெயில் மூலமாகவோ ரெஸ்யூமை பதிவு செய்துகொள்ளலாம்.

8. வேலைவாய்ப்பு இணையதளங்கள் நிறைய இருக்கிறது என்றாலும், சரியான இணையதளத்தை தேர்ந்தெடுத்து ரெஸ்யூமை அப்ளோடு செய்துகொள்ள வேண்டும். சரியான இணையதளம் என்றால் indeed, naukri, monster

9. வெற்றிக்கான சிறந்த வழி என்பது முயற்சி மட்டுமே. வேலைவாய்ப்புக்கான தேடல்கள் இருந்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். 

10. நண்பர்களிடம் தங்களது ரெஸ்யூமை ஷேர் செய்து வேலைவாய்ப்பு உதவியை கேட்கலாம். பரிந்துரை மூலம் வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

11. அரசுப்பணியில் சேர ஆர்வம் இருப்பவர்கள், கல்லூரியில் படிக்கும் போதே தயார் செய்துகொள்வது நல்லது.

12. கேட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மத்திய அரசு நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கிறது. கேட் தேர்வுக்கு கல்லூரியில் முதல் வருடத்தில் இருந்தே தயார் செய்துகொண்டால் வெற்றி நிச்சயம்.

வெற்றிக்கான வழியை தேர்ந்தெடுத்து, முயற்சியுடன் திறமையை முன்னேடுத்துச் சென்றால் வெற்றி நம் கையில். அடுத்த வாரம் “வங்கித் தேர்வுக்கு பயிற்சி எதற்கு?” என்கிற தலைப்பில் சொல்லி அடிப்போம். புதியதலைமுறையின் “வேலைவாய்ப்பு” பக்கத்திலும் வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.