சிறப்புக் களம்

ஸ்மார்ட் போனை அதிக நேரம் பார்க்கிறீர்களா? பார்வை பத்திரம்..

ஸ்மார்ட் போனை அதிக நேரம் பார்க்கிறீர்களா? பார்வை பத்திரம்..

webteam

ஸ்மார்ட்போன்களை அதிகப்படியான நேரம் பயன்படுத்துவதால் கண் சம்பத்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் இதனால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று பிஎம்சி கண்ணொளியியல் என்னும் மருத்துவம் சார்ந்த பத்திரிகையில் வெளிவந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அறிவியல் உலகில் நாம் நமது அதிகப்படியான நேரத்தை டிஜிட்டல் திரையில் தான் செலவிடுகிறோம். வீட்டில் தொலைக்காட்சியில் பார்ப்பது, மடிக்கணினி, ஸ்மார்ட்போன்கள் என நாம் அதிக நேரத்தை இதில் தான் செலவிடுகிறோம் அல்லது நாம் செலவழிக்க நேர்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களை அதிகநேரம் பயன்படுத்துவதால் நமது கண்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

நாம் அதிக நேரம் இந்த டிஜிட்டல் திரையில் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிறது இதன் காரணமாக கண்கள் உலர்கிறது. கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபடும்போது நமக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த பிரச்னைகள் தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே நாம் தேவையில்லாமல் ஸ்மார்ட்போன்களில் நமது நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் கண் சம்மந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அந்த மருத்துவப் பத்திரிகை அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளை அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் அவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலே செலவிடுகின்றனர். இது குழந்தைகளுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல இதனால் குழந்தைகளின் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்படும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை கையாளுவதை பெருமையாக கருதுகின்றனர். அதில் உள்ள ஆபத்துகள் அவர்களுக்கு புரிவது இல்லை.